Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மோசமான வருடம்.. முதல்முறை இப்படி.. மூன்று வருடத்தில் இல்லாத சரிவு.. மீண்டு வருவாரா கிங் கோலி!

சிட்னி: கடந்த மூன்று வருடங்களில் முதல்முறையாக இந்திய அணியின் கேப்டன் கோலி டெஸ்ட் தரவரிசையில் சரிவை சந்தித்து உள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு இது கொஞ்சம் மோசமான வருடம் என்றுதான் கூற வேண்டும். இந்த வருடம் நடந்த கிரிக்கெட் தொடர் எதிலும் கோலியால் முழுமையாக கலந்து கொள்ள முடியவில்லை.

கொரோனா காரணமாக பெரிய அளவில் கிரிக்கெட் தொடர் எதுவும் நடக்கவில்லை. தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரிலும் கோலி முழுமையாக கலந்து கொள்ள முடியவில்லை.

எப்படி

எப்படி

இதனால் சர்வதேச அளவில் இந்த முறை கோலி எந்த சதமும் அடிக்க முடியவில்லை. எல்லா வருடமும் 5-7 சதங்களை கோலி அடிப்பார். ஆனால் இந்த முறை அப்படி எதுவும் அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அதேபோல் டெஸ்ட் தொடரிலும் இவரால் கவனம் செலுத்த முடியவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே இவர் ஆடி உள்ளார். இதனால் இவரின் டெஸ்ட் தரவரிசை சரிவை சந்தித்துள்ளது .

சரிவு

சரிவு

கடந்த மூன்று வருடங்களில் முதல்முறையாக இந்திய அணியின் கேப்டன் கோலி டெஸ்ட் தரவரிசையில் சரிவை சந்தித்து உள்ளார். டிசம்பர் 5ம் தேதி 2017க்கு பின் முதல்முறையாக கோலி டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இடம்பெறாமல் பின் தங்கி உள்ளார்.

கோலி

கோலி

அதன்படி டெஸ்ட் பேட்ஸ்மேன் ரேங்கில் கோலி மூன்றாம் இடத்திற்கு சென்று உள்ளார். கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஸ்மித் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் மட்டுமே கோலி மீண்டும் டாப் 2 இடங்களுக்குள் வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 30, 2020, 15:07 [IST]
Other articles published on Dec 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+