ஏதாவது பண்ணுங்க ப்ரோ.. வேறு வழியே இல்லை.. நேராக ரோஹித் சர்மாவிடம் சென்று உதவி கேட்ட கோலி..பரிதாபம்!
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய பவுலர்கள் மோசமாக சொதப்பிய காரணத்தால் இந்திய கேப்டன் கோலி கடும் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி தற்போது சென்னையில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிரடியாக ஆடி உள்ளது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்து அணி 500 ரன்களை கடந்தும் ஆடி வருகிறது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அதிரடியாக 218 ரன்கள் எடுத்துள்ளார்.

எப்படி
இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எல்லோரும் கிட்டத்தட்ட பொறுப்பாக ஆடினார்கள். ஜோ ரூட் 218, சிப்லி 87, ஸ்டோக்ஸ் 82, போப் 34, பர்ன்ஸ் 33 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இந்திய பவுலர்கள் யாருமே இன்று கேம் சேஞ்சர் என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக பவுலிங் செய்யவில்லை.

மோசம்
அதிலும் ரூட் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினார்கள். அஸ்வின் எல்லாம் 40+ ஓவர்களை போட்டும் கூட விக்கெட் ரூட் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் இந்திய வீரர்கள் ஓவர் போட்டு போட்டு மொத்தமாக திணறிப் போனார்கள்.

திணறல்
கோலியும் எல்லோருக்கும் ஓவர் கொடுத்து முயன்று பார்த்துவிட்டார். ஆனாலும் எந்த பவுலரும் விக்கெட் எடுக்க முடியவில்லை. இதனால் கடைசியில் வேறு வழியில்லாமல் ரோஹித் சர்மாவை கோலி பவுலிங் செய்ய அழைத்தார். புல் டைம் பவுலர்கள் சரியாக ஆடவில்லை என்று பார்ட் டைம் பவுலர் ரோஹித்தை கோலி இறக்கினார்.

ரோஹித்
ரோஹித் இதில் சிறப்பாக பவுலிங் செய்தார். கும்ப்ளே ஸ்டைலில் இவர் வீசிய பவுலிங் சிறப்பாக இருந்தது. ஆனால் இதில் பெரிய அளவில் விக்கெட் எதுவும் விழவில்லை. இந்திய பவுலர்கள் இன்று மோசமாக பவுலிங் செய்து வருவதால் கோலி கடுமையான விரக்தியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications