நீங்க வேண்டாம்.. ரஹானாவை திடீரென உட்கார வைத்த கோலி.. எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்.. ஷாக்கிங்!
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் பண்டுக்கு கேப்டன் கோலி புரோமோஷன் கொடுத்து இருக்கிறார். ஆனால் இதுவும் இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவவில்லை.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இன்று ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி அதிர்ச்சி அளித்துள்ளது.
தற்போது பண்ட், கோலி ஆகியோர் களத்தில் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்திய அணி
4 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

எப்படி
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் பண்டுக்கு கேப்டன் கோலி புரோமோஷன் கொடுத்து இருக்கிறார். இன்று காலையிலேயே புஜாரா தேவையின்றி ரன் அவுட் ஆனார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அவர் பேட்டை தவறவிட்டதால் ரன் அவுட் ஆனார்.

ரன் அவுட்
அதன்பின் ரோஹித் சர்மாவும் தேவையின்றி கிரீஸை தாண்டி செல்ல கீப்பர் பென் போக்ஸ் அவரை ஸ்டம்பிட் செய்தார். இப்படி அடுத்தடுத்து இரண்டு முக்கிய வீரர்கள் அவுட்டான நிலையில் இந்திய அணி அதிர்ச்சி அளித்தது. இதனால் ரோஹித்துக்கு பின் ரஹானே களமிறங்க வேண்டும்.

ஆனால் என்ன
ஆனால் ரஹானேவிற்கு பதிலாக பண்டை களமிறங்கும்படி கோலி கூறினார். இடதுகை ஸ்பின் பவுலர்கள் பவுலிங் செய்கிறார்கள். இதனால் பிட்ச் பண்ட் ஆடுவதற்கு சாதகமாக இருக்கும். இதன் காரணமாக பண்டை களமிறங்கும்படி கோலி கூறினார்.

கோலி என்ன சொன்னார்
ஆனால் பண்டும் 11 பந்துகள் பிடித்த நிலையில் ஸ்டம்பிட் செய்தார். வரிசையாக மூன்று முக்கிய வீரர்களும் ஸ்டம்பிட் முறையில் அவுட் ஆனார்கள். ஸ்பின் பவுலர்களை நன்றாக எதிர்கொள்வார்கள் என்று பண்டை கோலி அனுப்பினார். ஆனால் இது இந்திய அணிக்கு கை கொடுக்கவில்லை. இவர் அவுட்டான நிலையில் ரஹானே தற்போது பேட்டிங் இறங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications