For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி வாக்குவாதம் பண்ணிட்டு இருக்காதீங்க.. கோபமாக கத்திய கோலி.. பரபரப்பு வீடியோ.. என்ன நடந்தது?

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி இங்கிலாந்து வீரரிடம் கோபம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 112 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

சிறப்பாக பவுலிங் செய்த அக்சர் பட்டேல் 6 விக்கெட்டுகளை எடுத்தார். தற்போது இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.

போர்ட்

போர்ட்

இந்த போட்டியில் ஸ்டூவர்ட் போர்ட் போட்ட இரண்டாவது ஓவரில் சுப்மான் கில் முதல் ஸ்லிப்பில் இருந்த பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்தார். இதை ஸ்டோக்ஸ் சரியாக கேட்ச் பிடித்துவிட்டார். ஆனால் பந்து இவரின் கையில் படும்போது, அதன் பாதி பகுதி தரையில் பட்டது.

ஸ்டோக்ஸ்

ஸ்டோக்ஸ்

இதற்கு களத்தில் இருந்த நடுவர் சாப்ட் சிக்னலில் அவுட் என்று கொடுத்துவிட்டார். ஆனாலும் சாப்ட் சிக்னல் என்பதால் மூன்றாவது நடுவர் சோதனை செய்தார். இந்த சோதனையில் பந்து ஸ்டோக்ஸ் கைக்கு செல்லும் முன் லேசாக தரையில் பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

விக்கெட் இல்லை

விக்கெட் இல்லை

இதையடுத்து கில் அவுட் இல்லை என்று மூன்றாவது நடுவர் கூறினார். இதையடுத்து ஸ்டோக்ஸ் நேரடியாக சென்று நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். நான் பந்தை சரியாகத்தான் பிடித்தேன். பந்து கீழே குத்தவில்லை என்று வாக்குவாதம் செய்தார்.

சர்ச்சை

நீண்ட நேரம் ஸ்டோக்ஸ் இப்படி நடுவரிடம் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்து கோலியும் கடுப்பானார். இது எல்லாம் விக்கெட் இல்லை.. தேவையின்றி வாக்குவாதம் செய்யாதீர்கள் என்று கோலி கத்தினார்.

டிரெஸ்ஸிங் ரூம்

டிரெஸ்ஸிங் ரூம்

டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து கொண்டு கோபமாக கோலி கத்தினார். கோலி இப்படி கோபமாக குரல் கொடுத்தது வீடியோவாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஸ்டோக்ஸ் பிடித்த கேட்ச் குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Story first published: Thursday, February 25, 2021, 9:12 [IST]
Other articles published on Feb 25, 2021
English summary
Skipper Kohli gets angry with Ben Stokes in the 3rd test between India and England.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+