கிங்குடா கோஹ்லி!.. ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தேர்வு!
சென்னை: ஐசிசி அமைப்பு வருடா வருடம் தொடக்கத்தில் அதற்கு முந்தைய வருடத்திற்கான சிறந்த வீரர்கள் யார் என்று விருது வழங்கும். அந்த வருடம் முழுக்க சிறப்பாக விளையாடிய வீரர்களை அடிப்படியாக கொண்டு இந்த விருதுகள் அளிக்கப்படும்.
இந்த விருதுகளை வாங்க வருடம் முழுக்க மிகவும் சிறப்பாக விளையாட வேண்டும். ஒருநாள், டெஸ்ட், டி-20 என அனைத்து ஐசிசி போட்டிகளும் இதில் கருத்தில் கொள்ளப்படும்.
இந்த நிலையில் 2017ம் வருடத்திற்காக கோஹ்லி இந்த விருதை வாங்கி இருக்கிறார். சென்ற முறை இந்தியாவில் அஸ்வின் இந்த விருதை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தொடர்
ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கியதற்காக கோஹ்லிக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக கோஹ்லிக்கு ஐசிசி டிவிட் செய்து பாராட்டி இருக்கிறது. மேலும் அவருக்காக வீடியோ ஒன்றும் வெளியிட்டு இருக்கிறது.

ருத்ர தாண்டவம்
கோஹ்லி சென்ற வருடம் மட்டும் ஒருநாள் போட்டியில் ஆவரேஜாக 76.84 ரன்கள் அடித்து இருக்கிறார். மேலும் ஒரு வருடம் முழுக்க ஒருநாள் போட்டியில் மட்டும் 6 சதம் விளாசி உள்ளார். மேலும் அதிகபட்ச ஒருநாள் ஆவரேஜ் வைத்துள்ளார்.
ஆவரேஜ்
இவர் வைத்து இருக்கும் 55.74 ஆவரேஜ் தான் உலகத்திலேயே ஒருநாள் போட்டியில் கிரிக்கெட் வீரர் ஒருவர் வைத்து இருக்கும் அதிகபட்ச ஆவரேஜ். இதன் மூலம் இவர் டான் பிராட் மேன், சச்சின் அனைவரையும் பின்னுக்கு தள்ளி இருக்கிறார்.
கோஹ்லி சச்சின்
வெறும் 29 வயதில் இவர் இப்போதே 32 செஞ்சுரிகள் அடித்துவிட்டார். இன்னும் சச்சினின் 49 செஞ்சுரிகளை நெருங்க மிக குறைந்த காலமே இருக்கிறது. 2017போல இவர் இந்த வருடமும் ஆடினால் 2020க்குள் இவர் அனைத்து சாதனைகளையும் முறையடிப்பார்.
இன்னுமொரு விருது
அதேபோல் இவருக்கு இன்னொரு விருதும் அளிக்கப்பட்டு இருக்கிறது. சார் கார்பீல்ட் சோப்பார்ஸ் கோப்பை விருது வழங்கப்பட்டு உள்ளது. அவர் இந்த வருடத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். கிரிக்கெட் உலகில் கொடுக்கப்படும் உயரிய விருதுகளில் இதுவும் ஒன்றாகும்.

எவ்வளவு
ஒருநாள் போட்டி மட்டும் இல்லாமல் டெஸ்ட் மற்றும் டி-20 போட்டியிலும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் மொத்தம் 2203 ரன்கள் அடித்துள்ளார். 1818 ரன்களை ஒருநாள் போட்டியில் எடுத்து இருக்கிறார். 299 ரன்களை டி-20 போட்டியில் எடுத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications