Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதுதான் பிளானே.. தமிழக வீரர் ஒருவருக்கு அதீத முக்கியத்துவம் தரும் கோலி.. பின்னணியில் மாஸ் காரணம்

சிட்னி: இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவருக்கு கோலி மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பல்வேறு முக்கிய காரணங்களால் கோலி ஒரு குறிப்பிட்ட தமிழக வீரரை தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் வியாழக்கிழமை தொடங்க உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கு கோலி இந்தியா திரும்பி விடுவார். இதனால் முதல் போட்டியில் எப்படியாவது வெற்றிபெறும் எண்ணத்தில் கோலி இருக்கிறார்.

ஏன்

ஏன்

இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவருக்கு கோலி மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பல்வேறு முக்கிய காரணங்களால் கோலி ஒரு குறிப்பிட்ட தமிழக வீரரை தொடர்ந்து ஆதரித்து வருகிறார். அந்த தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர்.. ஆம் வாஷிங்க்டன் சுந்தருக்கு கோலி பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

ஜடேஜா

ஜடேஜா

தற்போது காயத்தோடு இருக்கும் ஜடேஜாவை கணக்கில் எடுக்காமல் பார்த்தால் இந்திய அணியில் இரண்டு ஸ்பின் பவுலர்கள்தான் உள்ளனர். ஒருவர் அஸ்வின். இன்னொருவர் குல்தீப் யாதவ். சகால் எப்போதோ இந்தியா திரும்பிவிட்டார். பிரித்வி ஷா அணியில் எடுக்கப்பட்டால் சில லெக் ஸ்பின் ஓவர்களை வீசுவார்.

வாஷிங்க்டன் சுந்தர்

வாஷிங்க்டன் சுந்தர்

இந்த நிலையில்தான் தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் இந்திய அணியில் முக்கியத்துவம் பெறுகிறார். அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகிய இரண்டு பேரில் ஒருவர் காயம் அடைந்தால் மாற்று வீரராக வாஷிங்க்டன் சுந்தரை அணிக்குள் கொண்டு வர கோலி நினைக்கிறார். அதோடு கோலிக்கு மிகவும் நெருக்கமானவர் வாஷிங்க்டன் சுந்தர்.

எப்படி

எப்படி

இவரை இந்திய அணியில் வளர்த்துவிட கோலி நினைக்கிறார். வாஷிங்க்டன் சுந்தரை டி 20 அணியில் முக்கியமான பவுலராக மாற்றியது போல டெஸ்ட் போட்டியிலும் முக்கியமான வீரராக மாற்றும் திட்டத்தில் கோலி இருக்கிறார். இதனால்தான் அவரை ஆஸ்திரேலியாவில் தங்கி இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

என்ன ஆச்சு

என்ன ஆச்சு

இப்போது இவர் நெட் பயிற்சியில் மட்டுமே பவுலிங் செய்து வருகிறார். ஆனால் இவரை வரும் நாட்களில் டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக கோலி அறிமுகப்படுத்துவார் என்கிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் எதிர்காலத்தில் அஸ்வினை மொத்தமாக வாஷிங்க்டன் சுந்தர் மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார்கள். கோலியின் திட்டம் இதுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, December 15, 2020, 21:23 [IST]
Other articles published on Dec 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+