விராத் கோஹ்லியின் சம்ஹாரம்.. மீண்டும் சதமடித்து அசத்தல்!
Recommended Video

விராத் கோஹ்லி மீண்டும் சதமடித்து அசத்தல்!- வீடியோ
ட்ரெண்ட்பிரிட்ஜ் : இந்திய இங்கிலாந்து அணிகளிக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் முதல் இன்னிங்சில் 3 ரன்களில் சதத்தை தவற விட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் பல்வேறு சாதனைகளை கோஹ்லி படைத்துள்ளார். அதனை பற்றிய ஒரு தொகுப்பு
1) டெஸ்ட் போட்டிகளில் 23ஆவது சதம்
டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி இன்று தனது 23ஆவது சதத்தை அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் சேவாக் உடன் நான்காம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். முதல் இடத்தில் 51 சதங்களுடமலன் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
2) கேப்டன் ஆக 16ஆவது சதம்
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த கேப்டன்கள் வரிசையில் 16 சதங்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் கிரீம் ஸ்மித் (25) உள்ளார்.
3) அரை சதத்தை சதமாக மாற்றும் திறமை
டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் அடித்து அதனை சதமாக மாற்றும் வீரர்கள் வரிசையில் விராட் கோஹ்லி கிரிக்கெட் பிதாமகன் சர் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். பிராட்மேன்(69.05%) மற்றும் விராட் கோஹ்லி(56.09%). தற்போது விளையாடி வரும் வீரர்களில் இவரே மிகச்சிறந்த 50 to 100 கன்வர்ஷன் வைத்துள்ள வீரர் என்பது கோஹ்லியின் தனிச்சிறப்பு.
4) இங்கிலாந்து தொடரில் அதிக ரன்களை அடித்த இந்திய கேப்டன்
விராட் கோஹ்லி இதுவரை இந்த தொடரில் 440 ரன்களை அடித்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்களை அடித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னால் அசாருதீன் அடித்த 426 ரன்களே அதிகமாகும்.
Story first published: Tuesday, August 21, 2018, 11:19 [IST]
Other articles published on Aug 21, 2018


Click it and Unblock the Notifications