Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவிலிருந்து பறந்த போன் கால்.. கோலி சொன்ன வார்த்தையால் மாறிய பிளான்.. ப்பா செம பின்னணி!

சிட்னி: இந்தியாவில் இருந்து கேப்டன் கோலி செய்த போன் கால் ஒன்றுதான் இந்திய அணியின் டெஸ்ட் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்துள்ளது.

பல திருப்பங்கள், சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் இந்த வெற்றியை பார்த்து ஆஸ்திரேலியா மிரண்டு போய் உள்ளது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணிவென்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு கோலி எப்படி முக்கிய காரணமாக இருந்தார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

வெற்றி

வெற்றி

விராட் கோலி இந்தியாவில் இருந்து கொடுத்த ஐடியா ஒன்றுதான் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்டில் இந்திய அணிக்கு உதவியது என்று கூறப்படுகிறது. அதன்படி மூன்றாவது டெஸ்டில் நான்காவது நாள் ஆட்டத்திற்கு பின் இந்திய அணியின் பயிற்சிக்குழுவிற்கு விராட் கோலி போன் செய்து அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.

ஐடியா

ஐடியா

முக்கியமாக பேட்டிங் ஆர்டர் குறித்த அறிவரைகளை விராட் கோலி வழங்கி உள்ளார். இந்திய அணி சிறப்பாக விளையாடினால் கடைசி நாள் ஆட்டத்தில் வெற்றிபெற முடியும் அல்லது டிரா செய்ய முடியும் என்று விராட் கோலி கூறியுள்ளார். முடிந்த அளவு வெற்றிக்கு முயற்சி செய்யுங்கள், மற்றதை பார்த்துக்கொள்ளலாம் என்று கோலி கூறியுள்ளார்.

ரஹானே

ரஹானே

அதோடு இந்திய அணியில் ரஹானே அல்லது புஜாரா வேகமாக விக்கெட்டை இழந்தால் பண்டை 5வது பேட்ஸ்மேனாக இறக்குங்கள். விஹாரியை இறக்க வேண்டாம். பண்ட் இறங்கினால் ரன்னை உயர்த்துவார். இது நமக்கு போட்டியில் ஆதிக்க உணர்வை கொடுக்கும் என்று கோலி கூறியுள்ளார்.

புஜாரா

புஜாரா

முறைப்படி புஜாரா அல்லது ரஹானே அவுட் ஆன பின் விஹாரிதான் இறங்க வேண்டும். ஆனால் பண்ட்டை இறக்கும் படி கோலிதான் இந்தியாவில் இருந்து ஐடியா கொடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக்குழு கூறியுள்ளது. கோலி சொன்னபடியே மூன்றாவது டெஸ்டில் 5வது இடத்தில் களமிறங்கிய பண்ட் 97 ரன்கள் எடுத்தார்.

டெஸ்ட்

டெஸ்ட்

அதேபோல் இன்னொரு பக்கம் கடைசி டெஸ்டிலும் 5வது இடத்தில் களமிறங்கி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இவரை 6வது இடத்திற்கு பதிலாக ஐந்தாவது இடத்தில் களமிறக்குவதே சரியாக இருக்கும் என்று கோலி கூறி இருந்தார். இந்த நிலையில் கோலி கூறியபடி இந்திய அணியை பண்ட் வெற்றிபெற வைத்துள்ளார்.

கேப்டன் கோலி

கேப்டன் கோலி

இந்திய அணியின் கேப்டன் கோலி பாதியில் வெளியேறிவிட்டார் என்று பலர் விமர்சனங்கள் வைத்தனர். ஆனால் இந்தியாவில் இருந்தபடி கோலி தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வந்துள்ளார். அதேபோல் அணியின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்துள்ளார்

Story first published: Tuesday, January 26, 2021, 15:41 [IST]
Other articles published on Jan 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+