
கட்டாயம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தேர்வில் கேப்டன் கோலிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக இந்திய அணியில் கோலி நான்கு பவுலர்கள் மற்றும் ஒரு பார்ட் டைம் பவுலர் உடன் ஆடுவதை விரும்புவார். சமயத்தில் அந்த பார்ட் டைம் பவுலரை கூட பயன்படுத்த மாட்டார்.

பார்ட் டைம்
ஹர்திக் பாண்டியா பந்து வீசவில்லை என்றால் வெறும் 4 பவுலர்களுடன் கூட கோலி களமிறங்குவார். ஆனால் ரஹானே இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ஐந்து பவுலருடன் களமிறங்கினார். இது இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது. ஐந்து பவுலர் பார்முலா இந்திய அணிக்கு புதிய வலிமை கொடுத்துள்ளது.

மாற்றம்
இதனால் தற்போது கோலியும் ஐந்து பவுலர்களை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நீங்கள் ஐந்து பவுலர்களுடன் கண்டிப்பாக ஆட வேண்டும். வெறும் நான்கு பவுலர்களை மட்டும் பயன்படுத்த கூடாது என்று கோலிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிசிசிஐ
பிசிசிஐ தேர்வுக்குழு நிர்வாகிகள் இது தொடர்பாக கோலிக்கு கடுமையான பரிந்துரைகளை செய்துள்ளனர். இதுதான் வெற்றிக்கான பார்முலா. ஒரு ஆல் ரவுண்டர் பவுலர் கண்டிப்பாக வேண்டும் என்று கோலியிடம் உறுதியாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது .

கட்டாயம்
விடுப்பு எடுத்துவிட்டு கோலி இந்தியா வந்த ஒரு மாத இடைவெளியில் இந்த மாற்றம் நடந்துள்ளது. இதனால் அணி தேர்வில் கோலி பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் இல்லாமல் கூடுதல் பவுலருடன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications