Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லியை விழுந்து விழுந்து தேடிய பாகிஸ்தான்... கூகுள் காட்டிக் கொடுத்தது!

டெல்லி: பாகிஸ்தானில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் கோஹ்லி முதல் இடத்தில் இருக்கிறார். பல முக்கிய கிரிக்கெட் வீரர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு கோஹ்லி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்டது இதுவே முதல் முறையாகும். கோஹ்லியை பாகிஸ்தான் ரசிகர்கள் தேடியதை அறிந்த இந்திய ரசிகர்கள் டிவிட்டரில் அது குறித்து எழுதி வருகின்றனர்.

ஷாஹித் அப்ரிடி அணியில் இருந்த போது பல முறை அவர் முதல் இடம் பிடித்து இருக்கிறார். ஆனால் இந்த முறை கோஹ்லி அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடம் பிடித்துள்ளார்.

கோஹ்லியின் பாகிஸ்தான் பாசம்

கோஹ்லியின் பாகிஸ்தான் பாசம்

கோஹ்லி எப்போதும் இந்திய அணியை மதிப்பதை போலவே பாகிஸ்தான் அணியையும் மதிக்க கூடியவர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீரின் பந்துவீச்சு குறித்து பலமுறை பாராட்டி இருக்கிறார். என்னால் அவரது பந்து வீச்சை மட்டுமே சமாளிக்க முடியாது என்று கூறியிருந்தார். இவர்கள் இருவரும் அந்த நிகழ்விற்கு பின் நண்பர்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.

கோஹ்லியை பாராட்டும் பாகிஸ்தான்

கோஹ்லியை பாராட்டும் பாகிஸ்தான்

கோஹ்லிதான் என்னுடைய விருப்பமான பேட்ஸ்மேன் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் பேசி இருந்தார். அவருடைய காலத்தில் நல்லவேளை நான் பந்து வீசவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் ஷாஹித் அப்ரிடியும் கோஹ்லி மிகவும் திறமையான வீரர் என்றார். மேலும் கோஹ்லி பல சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அதிகமாக தேடினார்கள்

அதிகமாக தேடினார்கள்

கோஹ்லியை போலவே பாகிஸ்தான் நாட்டில் அஹமது ஷேஷாத் என்று கிரிக்கெட் வீரர் இருக்கிறார். பார்ப்பதற்கு அப்படியே கோஹ்லியை போலவே இருப்பார், இவர் பேட்டிங் ஸ்டைலும், கோஹ்லி பேட்டிங் ஸ்டைலும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கும். இதன் காரணமாகவும் கோஹ்லியை பாகிஸ்தான் ரசிகர்கள் விழுந்து விழுந்து தேடி இருக்கின்றனர். அதேபோல் கோஹ்லி பற்றி பாகிஸ்தான் வீரர்கள் பேசியதையும் தேடி உள்ளனர்.

முதல் இடம் பிடித்தார்

முதல் இடம் பிடித்தார்

கோஹ்லியை பாகிஸ்தான் ரசிகர்கள் பல முறை கூகுளில் தேடியதால் கூகுள் டிரெண்ட்ஸில் அவர் முதல் இடம் பிடித்து உள்ளார். 2017ல் பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் பட்டியலில் அவர் முதல் இடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து சாஃப்ரஸ் அஹ்மது, முகமது அமீர், அஹ்மது ஷேஷாத் ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர்.

Story first published: Sunday, December 17, 2017, 10:26 [IST]
Other articles published on Dec 17, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+