Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திடீர் "ஆப்சென்ட்"..இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை கோலி.. இங்கிலாந்து தொடருக்கு முன் ஷாக் சம்பவம்!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் சென்னையில் நடக்க உள்ள நிலையில் கேப்டன் கோலி பெரிய அளவில் இந்த தொடர் மீது இதுவரை கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்க உள்ளது. இந்த தொடரில் ஆட உள்ள இங்கிலாந்து வீரர்கள் தற்போது சென்னை வந்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி முடித்துவிட்டு இங்கிலாந்து அணி சென்னை வந்துள்ளது. சென்னையில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்து தொடர் இப்படி சென்னையில் நடக்க உள்ள நிலையில் கேப்டன் கோலி பெரிய அளவில் இந்த தொடர் மீது இதுவரை கவனம் செலுத்தவில்லை. இவர் தனிப்பட்ட வகையில் உடைபயிற்சி செய்கிறார். பேட்டிங் பயிற்சி எல்லாம் செய்கிறார். ஆனால் கேப்டனாக சரியாக செயல்படவில்லை.

கேப்டன்

கேப்டன்

கேப்டனாக இவர் இந்திய அணியை இங்கிலாந்துக்கு எதிராக வழி நடத்தும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை என்கிறார்கள். பிளேயிங் 11 தேர்வு, வீரர்கள் பயிற்சி,திட்டமிடல் போன்ற விஷயங்கள் எதிலும் கோலி கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இவர் குழந்தை பிறந்த காரணத்தால் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

குழந்தை வேண்டும்

குழந்தை வேண்டும்

குழந்தையோடு இருக்க வேண்டும் என்பதாலும், குழந்தையோடு நேரம் செலவிட வேண்டும் என்பதாலும் கோலி மிகவும் பிசியாக இருக்கிறார். இதனால் இங்கிலாந்து தொடர் தொடர்பாக கோலி இதுவரை ஆலோசனை எதையும் நடத்தவில்லை. அதேபோல் அணியின் மீட்டிங் எதிலும் இதுவரை கோலி கலந்துகொள்ளவில்லை.

மோசம்

மோசம்

இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளது. இதனால் இவர் கண்டிப்பாக குழந்தை மற்றும் மனைவியுடன் இருக்க வேண்டும். இதில் தவறு இல்லை. ஆனால் இவர் இங்கிலாந்து தொடரில் இருந்தாவது விலகி இருக்க வேண்டும். குறைந்தது கேப்டன் பதவியையாவது ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

 ரஹானே கேப்டன்

ரஹானே கேப்டன்

ரஹானேவை கேப்டனாக தொடர அனுமதித்து இருக்க வேண்டும். கேப்டன்சியும் வேண்டும், மீட்டிங்கிற்கு வர மாட்டேன் என்ற மனநிலையில் கோலி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கோலி மீது இந்திய அணி கொஞ்சம் அதிருப்தியில் உள்ளது.

Story first published: Sunday, January 31, 2021, 11:26 [IST]
Other articles published on Jan 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+