வேணாம்னு சொல்றேன்ல.. மறுபடியும் ஒதுக்கிய கோலி.. ஏமாற்றம் அடைந்த தமிழக வீரர்.. மைதானத்தில் பகீர்
சென்னை: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வருகிறார்கள்.
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி கடுமையாக திணறி வருகிறது.அக்சர் பட்டேல் அடுத்தடுத்து 5 விக்கெட் எடுத்து அசத்தி உள்ளார்.
இங்கிலாந்து 5 விக்கெட்டுக்கு 60 ரன்களை எடுத்து சொதப்பி உள்ளது. இந்தியாவை விட 27 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

பிட்ச்
இந்த போட்டியில் பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாற்றப்பட்டுள்ளது. இந்தியா இங்கிலாந்து ஆகிய இரண்டு அணியின் பேட்ஸ்மேன்களுக்கும் பேட்டிங் செய்வது கடினமான காரியமாக மாறியுள்ளது. முக்கியமாக இங்கிலாந்து இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வருகிறார்கள்.

அக்சர்
இந்த போட்டியில் இதுவரை அக்சர், அஸ்வின், ரூட் , லீச் ஆகிய ஸ்பின் பவுலர்கள் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அந்த அளவிற்கு பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு கை கொடுத்து இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட பிட்சில் கோலி முக்கியமான ஸ்பின் பவுலரை புறக்கணித்து வருகிறார்.

ஸ்பின்
அதன்படி ஸ்பின் பவுலர் வாஷிங்க்டன் சுந்தரை கோலி வேண்டும் என்றே புறக்கணித்து வருகிறார். இவர் ஸ்பின் பவுலர், பிட்சும் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி இருக்கிறது. ஆனாலும் கோலி இவருக்கு ஏனோ ஓவர் கொடுக்கவில்லை.

அஸ்வின்
அஸ்வின், அக்சர் நன்றாக விக்கெட் எடுக்கிறார்கள். இதனால் இவர்களின் ரிதமை காலி செய்ய வேண்டாம் என்பதற்காக ஓவர் கொடுக்கவில்லையா என்று தெரியவில்லை. முதல் இன்னிங்சில் சுந்தர் பவுலிங் செய்யவில்லை.

இரண்டாவது இன்னிங்ஸ்
அதன்பின் தற்போது இரண்டாவது இன்னிங்சிலும் சுந்தருக்கு கோலி ஓவர் கொடுக்கவில்லை. சுந்தர் இப்படி புறக்கணிக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு ஸ்பின் பவுலரை கோலி இப்படி நல்ல ஸ்பின் பிட்சில் பயன்படுத்தாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications