என்ன.. இந்தியா ஜெயிச்ச அப்புறமும் இவர் இப்படி சொல்றாரு.. கோபமாக பேசிய கோலி.. பகீர் காரணம்
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற்ற பின்பும் கூட கேப்டன் கோலி நேற்று மிகவும் கோபமாக பேசினார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 49 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டி முழுக்க ஸ்பின் பவுலர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். வெறும் இரண்டு நாளில் மொத்த ஆட்டமும் முடிவிற்கு வந்து இருக்கிறது.

விமர்சனம்
இந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்ற பின்பும் கூட கோலி, இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை விமர்சனம் செய்துள்ளார். அதில், உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இருந்தது என்று சொல்ல முடியாது. நாங்கள் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் வரை எடுத்து இருந்தோம்.

அவுட்
அதன்பின் 150 எடுக்கும் முன் ஆல் அவுட் ஆகிவிட்டோம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இரண்டாவது இன்னிங்சில் பந்து மோசமாக திரும்பியது. முதல் நாள் பேட்டிங் செய்ய சாதகமான சூழ்நிலைதான் இருந்தது. அதிலும் 30 விக்கெட்டில் 21 விக்கெட் நேராக வந்த பந்து மூலமே விழுந்த விக்கெட் ஆகும்.

டெஸ்ட் போட்டி
டெஸ்ட் போட்டி என்பது தடுப்பு ஆட்டத்தை பொறுத்ததாகும். இதை தவரவிட்ட காரணத்தால்தான் இந்த போட்டியில் அதிக விக்கெட் விழுந்தத்து. பும்ராவிற்கு பெரிய அளவில் ஓவர் கொடுக்க முடியவில்லை . 100வது டெஸ்ட் என்றாலும் இஷாந்த் சர்மாவிற்கும் ஓவர் கொடுக்க மூடிடயவில்லை .

அஸ்வின்
அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். அவர் ஒரு லெஜண்ட் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு கேப்டனாக, அஸ்வின் என் அணியில் இருப்பதை நினைத்து பெருமைகொள்கிறேன். தொடர்ந்து இந்திய வீரர்கள் இதே போல் கடின உழைப்பை கொடுக்க வேண்டும், என்று கோலி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications