Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓரமா போங்க.. தமிழக வீரரை பாதியில் புறக்கணித்த இந்திய அணி.. சாஸ்திரி கூட எதுவும் சொல்லவில்லை.. ஷாக்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்க்டன் சுந்தரை கோலி பயன்படுத்தாதது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் இரவு பகல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது. பிங்க் பாலை வைத்து நேற்று இங்கிலாந்து அணிக்கு இந்தியா கடும் நெருக்கடி கொடுத்தது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 112 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்க்டன் சுந்தரை கோலி பயன்படுத்தாதது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இந்திய அணியில் தற்போது 5 பவுலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். 3 ஸ்பின் பவுலர், 2 பாஸ்ட் பவுலர்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகிறார்கள்.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியின் வெற்றிக்கு இந்த புதிய காம்பினேஷன் பெரிய அளவில் உதவுகிறது. ரஹானே உருவாக்கிய இந்த முறையை தற்போது கோலியும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். ஆனால் இந்திய 5 பவுலர்களை கோலி அணியில் எடுத்தாலும் 4 பவுலர்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.

எப்படி

எப்படி

கடந்த போட்டியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுத்தாலும் அவருக்கு கோலி 20 ஓவர் கூட கொடுக்கவில்லை. முதல் இன்னிங்சில் குல்தீப் வெறும் 6 ஓவர்கள் மட்டுமே வீசினார். இந்த நிலையில் நேற்று ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வாஷிங்க்டன் சுந்தர் ஒரு ஓவர் கூட வீசவில்லை.

சுந்தர்

சுந்தர்

சுந்தரை அணியில் எடுத்துவிட்டு அவருக்கு ஒரு ஓவர் கூட கொடுக்காமல் கோலி அப்படியே ஓரம்கட்டிவிட்டார். நேற்று இந்திய அணியின் பவுலிங் நன்றாக இருந்தது. பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி இருந்தது. கடைசிக்கட்டத்தில் கோலி பாஸ்ட் பவுலர்களுக்கு ஓவர் கொடுத்தார்.

அவுட்

அவுட்

இதனால் 80 ரன்னில் சுருள வேண்டிய இங்கிலாந்து 112 ரன்கள் வரை எடுத்தது. நேற்று சுந்தருக்கு ஓவர் கொடுத்து இருந்தால் இங்கிலாந்து இன்னும் வேகமாக ஆல் அவுட் ஆகி இருக்கும். ஆனால் இவரை அணியில் எடுத்துவிட்டு கோலி அவருக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை.

சாஸ்திரி

சாஸ்திரி

இதை பற்றி சாஸ்திரியும் கேள்வி எழுப்பவில்லை. ஐந்தாவது பவுலரை பயன்படுத்தவில்லை என்றால் அவரை ஏன் அணியில் எடுக்க வேண்டும். அதற்கு பேட்ஸ்மேனையே களமிறக்கலாமே என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Thursday, February 25, 2021, 11:18 [IST]
Other articles published on Feb 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+