Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முழு கன்ட்ரோல்.. இந்திய அணியை ஆட்டிப்படைக்கும் அந்த நபர்.. ஒதுங்கிக்கொண்ட கோச்.. பரபர பின்னணி

சிட்னி: இந்திய அணியில் தற்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சரியாக செயல்படவில்லை என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் கேப்டன் கோலிதான் இந்திய அணியில் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கிரிக்கெட் தொடரில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மிக மோசமாக சொதப்பி உள்ளது. ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா இழந்தது.

அதேபோல் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மிக மோசமாக ஆடி இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணியின் டெஸ்ட் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

இந்த நிலையில் இந்திய அணியில் தற்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சரியாக செயல்படவில்லை என்று கூறுகிறார்கள். ஒரு பயிற்சியாளருக்கு உள்ள பொறுப்புகள் எதையும் ரவி சாஸ்திரி செய்யவில்லை. அவர் வெறுமனே பெயருக்குத்தான் பயிற்சியாளராக இருக்கிறார் என்கிறார்கள்.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

கேப்டன் கோலிதான் இந்திய அணியில் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார் என்றும் கூறுகிறார்கள். கேப்டன் கோலிதான் அணி தேர்வில் முக்கிய பங்கு வகிக்கிறார். திட்டங்களையும் அவர்தான் வகுக்கிறார். அதேபோல் வீரர்கள் யாரெல்லாம் ஆட கூடாது என்பதிலும் கோலிதான் முடிவு எடுக்கிறார் என்கிறார்கள்.

மோசம்

மோசம்

பயிற்சியாளர் பெயருக்குத்தான் இருக்கிறார். கோலி அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுத்து முழு சுதந்திரத்தோடு இருக்கிறார் என்கிறார்கள். ரவி சாஸ்திரி சரியாக செயல்படாத காரணத்தால் அனைத்து பொறுப்புகளையும் கோலி தூக்கி சுமந்து கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

பாவம்

பாவம்

இதனால் ரவி சாஸ்திரி மீது ஏக கடுப்பில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது. இந்திய அணி நன்றாக இருந்தது. ஆனால் ரவி சாஸ்திரி தனது தவறான முடிவுகளால் அதை காலி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளது.

Story first published: Sunday, December 20, 2020, 14:20 [IST]
Other articles published on Dec 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+