Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கும்ப்ளே-கோஹ்லி பிரச்சினையை இப்படியா கையாளுவது.. கங்குலி கோபம்

கொல்கத்தா: கும்ளே மற்றும் கோலிக்கு இடையேயான விவகாரம் மிகவும் சிறப்பாக கையாளப்படவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய அணி பயிற்சியாளர் கும்ப்ளே-கேப்டன் கோஹ்லி மோதலால், கும்ப்ளே முன்கூட்டியே தனது பதவியாளர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். மேற்கிந்திய தீவுகள் பயணத்திற்கு அவர் செல்லவில்லை.

பயிற்சியாளராக தேர்ந்தெடுத்தபோதில் இருந்தே, கங்குலி கும்ப்ளேவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

அதிகார குழு

அதிகார குழு

இப்போதும் கங்குலி, பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான அதிகாரம் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழுவின் (CAC) மூன்று உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார். கங்குலி கூறியதாவது "கும்ளே மற்றும் கோலிக்கு இடையேயான விவகாரம் மிகவும் சிறப்பாக கையாளப்பட்டிருக்க வேண்டும். அதிகாரத்தில் இருந்தவர்கள் அதை செய்யவில்லை" என்றார்.

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி விண்ணப்பித்துள்ளார். ரவி சாஸ்திரி அணியின் முன்னாள் இயக்குனர் ஆகும். கடந்த வருடமும் சாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் கும்ப்ளே தேர்வானார்.

குற்றம்சாட்டியவர்

குற்றம்சாட்டியவர்

கங்குலி கும்ப்ளேவுக்காக லாபி செய்து, சக CAC உறுப்பினராக உள்ள, சச்சின் டெண்டுல்கர் மற்றும் வி.வி.எஸ். லக்ஸ்மண் ஆகியோர் மனதை மாற்றிவிட்டதாக சாஸ்திரி குற்றம்சாட்டியிருந்தார்.

நானே விண்ணிப்பிக்கலாம்

நானே விண்ணிப்பிக்கலாம்

இதுகுறித்து கங்குலியிடம் கேட்டபோது, எல்லோருக்கும் விண்ணப்பிக்க உரிமை உண்டு. நாம் தகுதியான நபரை தேர்ந்தெடுப்போம். ஒருவேளை நான் ஒரு நிர்வாகி அல்ல, என்றால் நானும் விண்ணப்பிக்க முடியும், " என்று கங்குலி கூறினார்.

கங்குலி உறுப்பினர்

கங்குலி உறுப்பினர்

ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையிலான ஏழு உறுப்பினர் குழு லோதா கமிட்டி தொடர்பான உச்சநீதிமன்றக் கட்டளைகளை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 ம் தேதி லோதா சீர்திருத்தங்களை செயல்படுத்துவது பற்றி விவாதிக்க ஒரு அவசரக் கூட்டம் நடக்கும். இதில் கங்குலியும் ஒரு உறுப்பினராகும்.

Story first published: Wednesday, June 28, 2017, 16:24 [IST]
Other articles published on Jun 28, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+