Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா பிளைட்ட பிடிச்ச கோலி... கிளம்பறதுக்கு முன்னாடி அணி வீரர்களுக்கு அட்வைஸ்!

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு போட்டியில் பங்கேற்ற கேப்டன் விராட் கோலி நாடு திரும்புவதற்கான பயணத்தை இன்று துவங்கினார்.

தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி பிசிசிஐயிடம் அவர் அடுத்த 3 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து விடுப்பு பெற்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை இந்தியா திரும்புவதற்கான தனது விமானத்தை அவர் பிடித்துள்ளார்.

போட்டியில் பங்கேற்ற விராட்

போட்டியில் பங்கேற்ற விராட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை கண்டுள்ளது. இந்த போட்டியில் மட்டும் பங்கேற்று விளையாடிய கேப்டன் விராட் கோலி, அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது.

நாடு திரும்பிய கோலி

நாடு திரும்பிய கோலி

தன்னுடைய குழந்தை பிறப்பின்போது தன்னுடைய மனைவியுடன் இருக்கும் வகையில் அவர் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே அடுத்த 3 போட்டிகளில் கேப்டனாக செயல்படுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்திருந்தது.

வீரர்களுடன் ஆலோசனை

வீரர்களுடன் ஆலோசனை

இந்நிலையில் இன்று காலை அவர் இந்திய விமானத்தை பிடித்து தனது பயணத்தை துவங்கினார். முன்னதாக அவர் தனது பொறுப்புகளை ரஹானேவிடம் கொடுத்தார். மேலும் அணி வீரர்களுடன் அவர் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

கோலி அட்வைஸ்

கோலி அட்வைஸ்

அணி வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அவர்களை சந்தித்து பேசிய விராட் கோலி, போட்டிகளை பாசிட்டிவ்வாக அணுக அவர்களுக்கு அறிவுறுத்தினார். தங்களது தீவிரத்தை மைதானத்தில் வெளிப்படுத்தவும் அவர் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

ரஹானேவின் முக்கிய பங்கு

ரஹானேவின் முக்கிய பங்கு

குறைந்த ஓவர்களின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது குவாரன்டைனில் உள்ள நிலையில் அவர் 3வது போட்டியில் தான் பங்கேற்பார். இந்நிலையில் வரும் 26ம் தேதி துவங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவின் பங்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.

Story first published: Tuesday, December 22, 2020, 17:09 [IST]
Other articles published on Dec 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+