உலக கோப்பையை வென்ற தல டீமை விட கோலி டீம் தான் பெஸ்ட்..! அவருக்கு நாக்குல சனி.. வேறென்ன சொல்ல..!
மும்பை:2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற தோனி தலைமையிலான அணியை விட, தற்போதைய கோலி தலைமையிலான அணியே சிறந்தது என்று இந்தியாவின் முன்னாள் மனவள பயிற்சியாளர் பாடி அப்டன் கூறியிருக்கிறார்.
உலக கோப்பை தொடருக்கான நாட்கள் நெருங்கி கொண்டிருக்கின்றன. வரும் 22ம் தேதி இந்திய அணி இங்கிலாந்து புறப்பட உள்ளது. இம்முறை கோப்பை இந்தியாவுக்கு தான் பலரும் கருத்துகளை கூறி வருகின்றனர். முதல் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர் கொள்ள உள்ளது.
இந்திய அணி குறித்தும், வீரர்கள் குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். அதில் கேப்டன் கோலியின் கேப்டன் ஷிப் தான் முக்கியமான ஒன்றாக உள்ளது. தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்ட்டி ரோட்ஸ் கேப்டன் பொறுப்பில் கோலிக்கும், தோனிக்கும் உள்ள வேற்றுமைகள் குறித்து கருத்து கூறியிருந்தார்.

அப்டன் கருத்து
இந் நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணியின் உலக கோப்பை வாய்ப்பு குறித்து முன்னாள் மனவள பயிற்சியாளர் பாடி அப்டன் சில கருத்துகளை கூறி இருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது:

வாய்ப்புள்ள அணிகள்
உலக கோப்பை தொடரில் இந்த இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக கருதப்படுகிறது. அந்த அணிகளுக்கு இடையேயான போட்டி உண்மையாகவே ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்.

வலிமையான அணி
2011ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்த சிறப்பம்சம் தற்போதைய அணியிடமும் இருக்கிறதா என்று கேட்டால், கண்டிப்பாக இருக்கிறது என்று சொல்வேன். அது தோனி தான்.தோனி தலைமையிலான அணியை விட தற்போதைய அணி உடலளவிலும் மனதளவிலும் மிகவும் வலிமையான அணியாகவே நான் பார்க்கிறேன்.

கோலி அணி சிறந்தது
இங்கிலாந்து செல்லும் தற்போதைய இந்திய அணியின் புள்ளிவிவரங்களை எல்லாம் பார்க்க நான் விரும்பவில்லை. ஆனால் வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் தோனி தலைமையிலான அணிக்கு நிகரானது தற்போதைய அணி. சொல்லப்போனால் அதைவிட சிறந்தது கோலி அணி என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications