ஒரு போட்டி, 66 ரன்கள், ஆனால் 2 சாதனைகள்…!! யாருன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!!
எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை ஆட்டத்தின் மூலம், கோலி புதிய மைல் கல்லை எட்டியிருக்கிறார்.
நடப்பு உலக கோப்பை தொடரில் ஆரம்பம் முதலே அட்டகாசமாக ஆடி வருபவர் கோலி. இந்திய அணி ஆடிய 6 ஆட்டங்களில், தொடர்ந்து 4 அரைசதங்களை அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 72 ரன்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 67 ரன்களை எடுத்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 77, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 82 எனவும் அசத்தல் பேட்டிங் தொடர்ந்தார் கோலி. ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச், வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் இது போலவே உலக கோப்பையில் தொடர்ந்து 4 அரைசதங்கள் அடித்துள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் கோலி இங்கிலாந்துக்கு எதிராக மற்றொரு அரைசதம் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பையில் தொடர்ந்து 5 சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துடன் கோலி இணைந்தார்.
முன்னதாக, உலக கோப்பையில் தொடர்ந்து 5 அரைசதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பட்டியலில் ஸ்மித் மட்டுமே இருந்தார். இப்போது அந்த பட்டியலில் கோலி, 2வது வீரராக இணைந்து இருக்கிறார். இந்த சாதனையை படைத்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.
இதற்கு முன்பாக, 1992ம் ஆண்டு உலக கோப்பையில் முகமது அசாருதீன் தொடர்ந்து 4 அரைசதங்கள் அடித்திருந்தார். இங்கிலாந்து மண்ணில் அந் நாட்டுக்கு எதிராக டிராவிட் அடித்த 1,238 ரன்களே சாதனையாகும். தற்போது கோலி 51 ரன்கள் சேர்த்ததன் மூலம் டிராவிட்டின் சாதனையையும் முறியடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications