கெய்லுக்கு 'பல்லே பல்லே' கற்றுக் கொடுத்த கோஹ்லி, மந்தீப் சிங்
லூதியானா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களான விராட் கோஹ்லியும், மந்தீப் சிங்கும் சக அணி வீரர் கிறிஸ் கெய்லுக்கு பாங்கரா நடனம் கற்றுக் கொடுத்துள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதிலும் கேப்டன் விராட் கோஹ்லிக்கு சக வீரரான ஏபிடி வில்லியர்ஸை மிகவும் பிடித்துள்ளது. அவரை ஒரு சகோதரர் போன்று பார்க்கிறார்.
இந்நிலையில் கோஹ்லியும், மந்தீப் சிங்கும் சக அணி வீரரான கிறிஸ் கெய்லுக்கு பஞ்சாபில் வைத்து பாங்கரா நடனம் கற்றுக் கொடுத்துள்ளனர். அந்த மூன்று பேரும் பல பஞ்சாபி பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளனர்.
பஞ்சாபி பாடல்களுக்கு அவர்கள் நடனமாடியபோது எடுக்கப்பட்ட வீடியோவை மந்தீப் சிங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கோஹ்லியும், கெய்லும் சேர்ந்து நடனம் ஆடுவது இது முதல் முறை அல்ல.
முன்னதாக ஷேன் வாட்சன் பாட கோஹ்லியும், கெய்லும் நடனம் ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications