Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்கு தடை விதியுங்கள்.. கோலிக்கு எதிராக பறந்த மெசேஜ்.. கடும் கட்டாயத்தில் ஐசிசி.. என்ன நடந்தது?

சென்னை: இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐசிசிக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இவர் ஐசிசி விதிகளை மீறிவிட்டதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அஹமதாபாத்தில் அடுத்த டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.

இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் ஒன்றில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வென்றுள்ளது.

கேப்டன்

கேப்டன்

இந்திய அணியின் கேப்டன் கோலி பொதுவாக களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவதற்கு பெயர் போனவர். களத்தில் சக வீரர்கள், எதிரணி வீரர்கள், நடுவர்கள் என்று பலரிடம் கோலி ஆக்ரோஷமாக செயல்படுவார்.தற்போது இதுவே கோலிக்கு எதிராக திரும்பி உள்ளது.

இரண்டாவது டெஸ்ட்

இரண்டாவது டெஸ்ட்

அதன்படி நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி நடுவரிடம் வாக்கு வாதம் செய்தார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டுக்கு இரண்டாவது இன்னிங்சில் நடுவர் நிதின் மேனன் விக்கெட் கொடுக்கவில்லை. எல்பிடபில்யூ சென்றதை நடுவர் இல்லை என்று கூறினார்.

டிஆர்எஸ்

டிஆர்எஸ்

இதன்பின் டிஆர்எஸ் எடுக்கப்பட்ட போது பந்து லேசாக ஸ்டம்பை உரசி சென்றதால் விக்கெட் கொடுக்கப்படவில்லை.அம்பயர்ஸ் கால் என்று கூறி விக்கெட் கொடுக்கப்படவில்லை. இதனால் நடுவரிடம் கோபம் அடைந்த கோலி நிதின் மேனனுடன் வாக்குவாதம் செய்தார்.

விமர்சனம்

விமர்சனம்

கோலியின் இந்த செயல் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஏற்கனவே உலகக் கோப்பை தொடரிலும் அதற்கு பின் ஆஸ்திரேலிய தொடரிலும் இதேபோல் கோலி நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். 24 மாதத்தில் இரண்டு முறை கோலி டீ மெரிட் புள்ளிகளை பெற்றுள்ளார்.

மூன்றாவது முறை

மூன்றாவது முறை

இதனால் மூன்றாவது முறை டீ மெரிட் புள்ளிகளை பெற்றால் கோலிக்கு தடை விதிக்கப்படும். ஒரு போட்டியில் ஆடுவதில் இருந்து கோலிக்கு தடை விதிக்கப்படும். நேற்று நடந்த டெஸ்டில் கோலி செய்தது விதிமீறல்தான். இதனால் அவருக்கு தடை விதிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.

டீ மெரிட்

டீ மெரிட்

கோலிக்கு எதிராக டீ மெரிட் புள்ளிகள் வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. கோலியின் செயல் தவறானது அவருக்கு ஒரு போட்டியில் தடை விதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். இதில் ஐசிசிக்கு கடுமையான நெருக்கடி வைக்கப்பட்டு வருகிறது.

Story first published: Wednesday, February 17, 2021, 10:06 [IST]
Other articles published on Feb 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+