குல்தீப், அக்சர், நதீம்.. 3 பேருமே கிடையாதாம்.. புதிய கையை களமிறக்கும் கோலி.. என்ன கேமா ஆடுறீங்க?
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூன்று முக்கியமான ஸ்பின் பவுலர்கள் இடம்பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் பவுலிங் மிகவும் மோசமாக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைய இந்த மோசமான பவுலிங் ஒரு காரணமாக இருந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஸ்பின் பவுலிங்கில் ஒரு மாற்றம் செய்யப்படலாம் என்கிறார்கள்.

மாற்றம்
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூன்று முக்கியமான ஸ்பின் பவுலர்கள் இடம்பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. முதல் போட்டியில் காயம் காரணமாக அக்சர் பட்டேல் ஆடவில்லை. இந்த நிலையில் இவரின் காயம் சரியாகி இருக்கிறது.

எப்படி
இந்த நிலையில் காயம் குணமானாலும் இவருக்கு ஓய்வு கொடுக்க இந்திய அணி நினைக்கிறது. கேப்டன் கோலி இரண்டாவது டெஸ்டிலும் அக்சர் பட்டேலை பயன்படுத்த மாட்டார் என்கிறார்கள். இப்போதுதான் காயத்தில் இருந்து மீண்டு வந்து இருப்பதால் அவரை கோலி பயன்படுத்த மாட்டார்.

நதீம்
இதுபோக நதீம் கடந்த போட்டியில் ஆடினார். அந்த போட்டியில் நதீம் மிக மோசமாக சொதப்பினார். இதனால் இரண்டாவது டெஸ்டில் நதீமிற்கு வாய்ப்பு கிடையாது என்று உறுதியாக கூறப்படுகிறது.

குல்தீப்
அதேபோல் குல்தீப் அணியில் இருந்தாலும், அவரும் பேட்ஸ்மேனுக்கு வெளியே பந்தை வீச கூடியவர் இல்லை.இவரின் பந்து ஸ்விங் ஆகி பேட்ஸ்மேனுக்கு உள்ளே செல்லும். இதனால் சுந்தர், அஸ்வின் போலவே இவரின் பவுலிங்கும் இருக்கும். ஆகவே இவரை எடுக்கும் முடிவும் கோலிக்கு இல்லை.

ராகுல் சாகர்
இதனால் ராகுல் சாகரை அணிக்குள் கொண்டு வர கோலி நினைக்கிறார். இவர் பேட்ஸ்மேனுக்கு வெளியே பந்தை சுற்றுவார். இதனால் நதீமிற்கு பதிலாக ராகுல் சாகரை கோலி களமிறக்க வாய்ப்புள்ளது. மும்பை அணியில் நன்றாக பந்து வீசி வரும் ராகுலை கோலி பயன்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications