
சென்னை
இந்த நிலையில் இதே சென்னை மைதானத்தில் இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இது இதே பிட்சில் நடக்குமா அல்லது அருகில் இருக்கும் பிட்சிற்கு மாற்றப்படுமா என்ற கேள்வி நிலவி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் வரும் 13ம் தேதி நடக்க உள்ளது.

அடுத்த டெஸ்ட்
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய அணி கண்டிப்பாக 5 பவுலர்களுடன் களமிறங்கும். அதேபோல்ஐந்து பவுலர்களில் இந்திய அணி முக்கியமான மாற்றத்தை செய்யும் என்கிறார்கள்.

மாற்றம்
இந்திய அணியில் அடுத்த போட்டியில் கண்டிப்பாக சபாஷ் நதீம் ஆட வாய்ப்பு இல்லை. இவர் முதல் டெஸ்டில் சரியாக ஆடவில்லை. இதனால் இவர் கண்டிப்பாக முதல் டெஸ்டில் ஆடுவதற்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லை.

வேண்டாம்
அடுத்ததாக இந்திய அணியில் சென்னை டெஸ்டுக்கு மட்டும் ஓப்பனிங் ஜோடி மாற வாய்ப்புள்ளது . ஸ்விங் பந்துகளில் ரோஹித் சர்மா திணறி வருகிறார். இதனால் ராகுல் இந்திய அணியில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ரோஹித் சர்மாவிற்கு ஒரு டெஸ்ட்டில் ஓய்வு கொடுக்கப்படலாம்.

நம்பிக்கை
இதனால் இந்திய அணியில் அடுத்த போட்டியில் இந்த இரண்டு மாற்றங்கள் கண்டிப்பாக செய்யப்படலாம் என்கிறார்கள். சமயத்தில் ரோஹித்திற்கு கோலி மேலும் ஒரு வாய்ப்பை கொடுப்பார் என்றும் கூறுகிறார்கள். ரோஹித் மீது கோலிக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் அவர் மேலும் ஒரு வாய்ப்பை பெற்றாலும் பெறுவார் என்கிறார்கள் .


Click it and Unblock the Notifications