Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஊர் ஊராக மூட்டையை தூக்கிக் கொண்டு சுற்ற.. அவர் என்ன முட்டாளா?.. ஏன் இந்த திமிர்.. கோலிக்கு செக்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி எதிர்பார்க்கும் முக்கியமான ஒரு பவுலருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறுகிறார்கள்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

ஆஸ்திரேலிய தொடருக்கு இந்த அதிக எதிர்பார்ப்போடு வந்த இந்திய அணிக்கு இது ஏமாற்றம் அளித்துள்ளது. இதனால் இரண்டாவது டெஸ்டில் மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

நதீம்

நதீம்

முதல் டெஸ்டில் இந்திய அணியில் சபாஷ் நதீம் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்திய அணியில் அக்சர் பட்டேல்தான் முதல் டெஸ்டில் ஆடி இருக்க வேண்டும். ஆனால் அவர் காயம் காரணமாக ஆடவில்லை. இதனால் நதீம் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

குல்தீப் யாதவ்தான் இந்திய அணியில் ஆட வேண்டும். ஆனால் அவரின் சைனா மேன் பவுலிங் ஒரே மாதிரி இருக்கும். நதீம் வித்தியாசமாக பவுலிங் செய்வார் என்பதால் கோலி நதீமை அணியில் எடுத்தார். ஆனால் இந்த அணி தேர்வு பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை.

மாற்றம்

மாற்றம்

இதனால் அடுத்த டெஸ்டில் இந்திய அணியில் நதீமிற்கு பதிலாக அக்சர் பட்டேல் மீண்டும் வருவார். பேட்டிங் பவுலிங் நன்றாக செய்வார் என்பதால் அக்சர் பட்டேலை கோலி உள்ளே கொண்டு வர இருக்கிறார். இதனால் குல்தீப் யாதவ் அடுத்த போட்டியிலும் வாய்ப்பு பெற மாட்டார் என்று கூறுகிறார்கள்.

குல்தீப் யாதவ் எப்படி

குல்தீப் யாதவ் எப்படி

குல்தீப் யாதவ் கடந்த ஒன்றரை வருடமாக இந்திய அணியில் ஆடவில்லை. ஐபிஎல் தொடரிலும் ஆடவில்லை. கொரோனாவிற்கு இடையே இவர் ஒவ்வோர் அணியிலும் இணைந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறார். ஆனாலும் இவரை அணியில் மட்டும் எடுப்பது இல்லை.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர் முழுக்க இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒவ்வொரு நாட்டிற்கு இந்திய அணியுடன் இவர் மூட்டையை தூக்கிக் கொண்டு செல்கிறார். கோலி இவரை புறக்கணித்து வருகிறார். இந்த நிலையில் இந்திய பவுலிங் சொதப்பலால் முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

கோலி காரணம்

கோலி காரணம்

இதற்கு கோலியின் அணி தேர்வுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. நதீமை கோலி உள்ளே கொண்டு வந்ததுதான் தவறு என்று கூறப்படுகிறது. கோலிக்கு அவரின் அணி தேர்வே தற்போது நெருக்கடியாக மாறியுள்ளது.

Story first published: Wednesday, February 10, 2021, 11:28 [IST]
Other articles published on Feb 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+