Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உள்ளே வந்ததும் வேலையை காட்ட போகும் கோலி.. கிலியில் "அந்த" வீரர்.. பிளேயிங் லெவனில் மாற்றம்?!

சென்னை: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும், கோலி யாருக்கு எல்லாம் வாய்ப்பு கொடுப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் நேற்று வெளியாகி உள்ளது. காயம் காரணமாக ஜடேஜா இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.

வீரர்கள்

வீரர்கள்

அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சந்தேகம்

சந்தேகம்

இந்த நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும், கோலி யாருக்கு எல்லாம் வாய்ப்பு கொடுப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது. அதன்படி ரோஹித் சர்மாவிற்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டியில் ஆடினார்.

இல்லை

இல்லை

ஆனால் இரண்டிலும் பெரிய அளவில் ரோஹித் சர்மா ஆதிக்கம் செலுத்தவில்லை. ஒரு இன்னிங்சில் மட்டும் அதிரடி காட்டினார். இதனால் ரோஹித் சர்மாவிற்கு கோலி வாய்ப்பு கொடுப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ரோஹித் சர்மாவிற்கு பதிலாக வேறு வீரரை கோலி களமிறக்குவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

கேப்டன்

கேப்டன்

கோலி கேப்டனாக இருப்பதால் ரோஹித் சர்மாவிற்கு டெஸ்ட் அணியில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைப்பது இல்லை. இப்போதும் கூட கோலி இல்லாத போது ரஹானேவிற்கு கீழ்தான் ரோஹித் சர்மா வாய்ப்பு பெற்றார். இதனால் கோலி மீண்டும் அணிக்குள் வந்துள்ளதால், அவர் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு அளிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஓப்பனிங்

ஓப்பனிங்

ரோஹித் சர்மாவிற்கு பதிலாக கே. எல் ராகுலை கோலி ஓப்பனிங் இறக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். மிடில் ஆர்டர் பண்ட் வருகை காரணமாக வலிமையாக உள்ளது. இதனால் ரோஹித் சர்மாவை கோலி ஓரம்கட்ட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, January 27, 2021, 12:44 [IST]
Other articles published on Jan 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+