For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எவ்வளவு பேசினார்.. அவரை எடுக்க கூடாது.. டேக் பண்ணியும் மனசு இறங்காத கோலி.. அவருக்கு மீண்டும் கல்தா?

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான லிமிட்டட் ஓவர் போட்டிகளில் மிடில் ஆர்டரில் ஆட போகும் வீரர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அஹமதாபாத்தில் அடுத்த டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.

ஸ்மார்ட் பிளான்.. இப்படி ஒரு ஸ்பின் படையை பார்த்ததில்லை.. 7 அணிகளுக்கு தரப்பட்ட அதிர்ச்சி வைத்தியம் ஸ்மார்ட் பிளான்.. இப்படி ஒரு ஸ்பின் படையை பார்த்ததில்லை.. 7 அணிகளுக்கு தரப்பட்ட அதிர்ச்சி வைத்தியம்

இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் ஒன்றில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வென்றுள்ளது. இதற்கு அடுத்து டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளது.

 இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான லிமிட்டட் ஓவர் போட்டிகளில் மிடில் ஆர்டரில் ஆட போகும் வீரர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் மிடில் ஆர்டரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினார்கள். இவர்கள் இருவரும் பெரிய அளவில் அதிரடியாக ஆடவில்லை.

வீரர்கள்

வீரர்கள்

இதனால் தற்போது 20-20 போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் பண்ட் கம்பேக் கொடுக்க இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக இவர் கம்பேக் கொடுக்க உள்ளார். ஆனால் இன்னொரு மிடில் ஆர்டர் வீரர் யார் என்ற கேள்வி நிலவி வருகிறது.

சூர்ய குமார்

சூர்ய குமார்

இந்த நிலையில் சூர்யகுமாரை அணிக்குள் கொடுக்க பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது. இதற்காக வைக்கப்பட்ட பிட்னஸ் டெஸ்டிலும் இவர் பாஸ் ஆகிவிட்டார். இதனால் இவரை அணியில் எடுப்பது மட்டுமே பாக்கி. ஆனால் இவரை எடுப்பதில் கோலிக்கு இன்னும் விருப்பம் இல்லை என்கிறார்கள்.

கோலி

கோலி

ஐபிஎல் 2020 தொடரில் இவருக்கும் கோலிக்கும் உரசல் ஏற்பட்டது. இதை கோலி இன்னும் மறக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் ரோஹித்தை கேப்டனாக்க வேண்டும் என்று செய்யப்பட்ட டிவிட்டை சூர்ய குமார் யாதவ் லைக் செய்ததும் சர்ச்சையானது.

கோபம்

கோபம்

பலமுறை கோலியை பாராட்டி சூர்ய குமார் யாதவ் டிவிட்களை செய்துவிட்டார். அவரை டேக் செய்தும் பார்த்துவிட்டார். ஆனாலும் இவர் மீது கோலிக்கு இன்னும் கோபம் குறையவில்லை என்கிறார்கள். இதனால் மீண்டும் இவர் கல்தா கொடுக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Saturday, February 20, 2021, 11:57 [IST]
Other articles published on Feb 20, 2021
English summary
Kohli may not select Surya Kumar Yadav in Team India for the limited-over series against England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X