Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லிக்கு கல்யாணம் ஆகிடுச்சு வேர்ல்ட் கப் ஜெயிச்சிடலாம் .. வரலாறு அப்படித்தான் சொல்லுது!

சென்னை: இந்திய கிரிக்கெட் கேப்டன்கள் திருமணம் ஆன பின் விளையாடும் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெறுவதாக கிரிக்கெட் உலகில் புதிய வைரல் பரவி வருகிறது. இதற்கு உதாரணமாக நிறைய ஆதாரங்கள் எடுத்து வைக்கப்பட்டு இருக்கிறது.

கபில் தேவ், டோணி ஆகியோரும் திருமணம் நடந்த பின் ஆன பின் நடந்த உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இதற்கு இன்னும் சில ஆதாரங்களும் வைக்கப்பட்டு இருக்கிறது.

இதையெல்லாம் விட இந்த செய்தி முன்னாள் கேப்டன் டோணியை வெகுவாக கவர்ந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் உலகக் கோப்பை

முதல் உலகக் கோப்பை

இந்தியா முதல் முதலாக 1983ல் உலகக் கோப்பை வென்றது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக கபில் தேவ் இருந்தார். இந்த உலகக் கோப்பை போட்டி நடப்பதற்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு கபில் தேவிற்கும், ரோமி பாட்டியா என்பவருக்கும் 1980ல் திருமணம் நடந்தது. சரியாக திருமணம் நடந்த பின் வந்த உலகக் கோப்பையை அவர் வெற்றி பெற்றார்.

2011 உலகக் கோப்பை

2011 உலகக் கோப்பை

1983க்கு பின் பல வருட காத்திருப்பு முடிந்து இந்தியா 2011ல் உலகக் கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக டோணி இருந்தார். கபில் தேவ் போலவே கோஹ்லிக்கும் கல்யாணம் ஆன பின் நடந்த முதல் உலகக் கோப்பை போட்டியாகும் அது. டோணிக்கு 2010ல் சாக்க்ஷி உடன் திருமணம் நடந்தது.

கோஹ்லி

கோஹ்லி

தற்போது இதைவைத்து கோஹ்லி எதிர்காலம் குறித்தும் பேசியுள்ளனர். கோஹ்லிக்கும் அனுஷ்காவிற்கும் தற்போது திருமணம் நடந்து இருக்கிறது. எனவே 2019 உலகக் கோப்பையை கண்டிப்பாக அவர் இந்தியாவிற்கு வாங்கி கொடுப்பார் என்று கூறப்பட்டு இருக்கிறது.

டோணிக்கு ஓகே

இது என்ன புது புரளி என்று பலரும் இந்த செய்து குறித்து கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் டோணி இந்த செய்தி வந்த இணையதள பக்கத்தை லைக் செய்து இருக்கிறார். மேலும் இந்த செய்திக்கு அவர் டிவிட்டரில் ஹார்ட் போட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 25, 2017, 13:14 [IST]
Other articles published on Dec 25, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+