ஆவாஸ் ஆகயா..!! சத்தமிட்டும் டிஆர்எஸ் வாய்ப்பை கோட்டை விட்ட கோலி.. தப்பித்த ஜேசன் ராய்
Recommended Video
எக்பாஸ்ட்ன்: இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் அதிரடி வீரர் ஜேசன் ராயை அவுட்டாக்கும் வாய்ப்பை கோட்டை விட்டிருக்கிறது இந்திய அணி.
எக்பாஸ்டன் மைதானத்தில் கிரிக்கெட் உலகமே பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இது இங்கிலாந்துக்கு வாழ்வா, சாவா போட்டி. ஆகவே அந்நாடு வெற்றிக்கு பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது.
இந்தியாவும் வென்று, அரையிறுதி வாய்ப்பை உறுதியாக்கிக் கொள்ள முயற்சிக்க உள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அணியில் 2 மாற்றங்கள். காயத்தால் கடந்த போட்டிகளில் விளையாட அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் உள்ளே வந்திருக்கிறார்.

விஜய் சங்கர் நீக்கம்
அதேபோல, மொயின் அலி வெளியே உட்கார வைக்கப்பட்டு, பிளாங்கெட் அழைக்கப் பட்டிருக்கிறார். இந்திய அணியில் விஜய் சங்கர் நீக்கப்பட்டு, இளம் வீரர் ரிஷப் பன்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக பெயர்ஸ்டோவும், ஜேசன் ராயும் களம் இறங்கினர்.

தொடக்கமே பவுண்டரிகள்
தொடக்கம் முதலே, இந்திய அணியின் பந்துவீச்சை துல்லியமாக இருவரும் கணித்திருக்கின்றனர் என்பது அவர்கள் மட்டையை சுழற்றுவதிலே கண்டு பிடிக்க முடிந்தது. ஷமியின் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை அழகாக தட்டி, தமது அதிரடியை ஆரம்பித்தார் ஜேசன் ராய். அவருக்கு இணையாக பெயர்ஸ்டோவும் ஈடுகொடுத்து ஆடினார். இருவரையும் உடனடியாக வீழ்த்தி ரன்ரேட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தார் கோலி.

சஹல் பவுலிங்
ஆகவே, 6வது ஓவரிலேயே சுழற்பந்தை களம் இறக்கினார். சஹல் வந்தார்.. பந்து வீசினார். ஒன்னும் மாற்றமில்லை....ரன்கள் வந்தன. 11வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை எட்டியது இங்கிலாந்து. அந்த ஓவரை வீசினார் ஹர்திக் பாண்டியா. அந்த ஓவரின் 5வது பந்து... லெக் திசையில் வீசினார் ஹர்திக் பாண்டியா.

ஜேசன் ராய் அவுட்?
அந்த பந்தை ஜேசன் ராய் ஆட... பந்து நேராக தோனியின் கைகளுக்கு செல்கிறது. இந்திய வீரர்கள் அவுட் என்று அப்பீல் கேட்க, நடுவரோ வொய்டு என்று அறிவிக்கிறார். இதனால், குழம்பி போன கோலி ஆவாஸ் ஆகயா என்று இந்தியில் சக வீரர்களிடம் ஓங்கி சத்தமிடுகிறார். ஆனால்... நடுவர் தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை. டிஆர்எஸ் வாய்ப்பை இந்திய கையில் எடுக்காமல் குழப்ப..அதற்கான நேரமும் முடிந்துவிட்டது.

டிஆர்எஸ் வாய்ப்பு போனது
பின்னர், தொலைக்காட்சி ரிப்ளேவில் போட்டு பார்த்த போது, பந்து ஜேசன் ராயின் கிளவுசில் பட்டு சென்றது நன்றாகவே தெரிந்தது. டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்தி இருந்தால்... இந்தியாவுக்கு விக்கெட் கிடைத்திருக்கும். ஆட்டத்தில் நிச்சயம் திருப்புமுனை கிடைத்திருக்கிறது. மொத்தத்தில் ஆவாஸ் ஆகயா என்று பேசி.. அப்பீலில் கோட்டை விட்டிருக்கிறார் கோலி.


Click it and Unblock the Notifications