For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 வருஷத்துல போட்டதே 10 பந்துதான்… ஆனால் ஆல்ரவுண்டரில் நம். 10… யாரு, கோஹ்லிதான்!

By Staff

டெல்லி: இன்றைய கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்றால், டோணியின் மகள் ஜிவா, அனுஷ்கா சர்மா முதற் கொண்டு அனைவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியைத்தான் கூறுவார்கள். ஆனால், அவர் சிறந்த ஆல்-ரவுண்டர் என்றால், அப்படியா என்று கேட்பார்கள்.

கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டு வருகிறது. அதில் ஒருதினப் போட்டியில் நம்பர் 1 பேட்ஸ்மேன், டி-20ல் நம்பர் 1 பேட்ஸ்மேன் வரிசையில் விராட் கோஹ்லி உள்ளார். டெஸ்டில் அவர் 5வது இடத்தில் உள்ளார்.

Kohli no 10 in t20 all rounder

அதெல்லாம் சரி. ஆனால், டி-20 போட்டியில் ஆல்-ரவுண்டர் வரிசையில் விராட் கோஹ்லி 10வது இடத்தில் உள்ளார். யுவராஜ் சிங், 19வது இடத்தில் உள்ளார்.

இத்தனைக்கும் விராட் கோஹ்லி, கடந்த 4 ஆண்டுகளில் 10 பந்துகள்தான் வீசியுள்ளார். டி-20ல் தான் விளையாடியுள்ள 55 போட்டிகளில் விராட் கோஹ்லி, மொத்தமே 24.2 ஓவர்கள் தான் பந்து வீசியுள்ளார். அதில் 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதுதான் விராட் கோஹ்லியின் மேஜிக்.

Story first published: Sunday, December 3, 2017, 13:25 [IST]
Other articles published on Dec 3, 2017
English summary
Indian cricket captain Kohli no 10 in all rounder in t-20
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X