அதுக்கு 9.. இதுக்கு 6 தான்.. கோஹ்லி செம டென்ஷன்!
பிர்மிங்காம்: இந்தியா பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவின் பீல்டிங் சரியில்லை என்று கேப்டன் விராத் கோஹ்லி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
விராத் கோஹ்லி சொல்லவே தேவையில்லை. நேற்று இந்திய வீரர்கள் நிறையவே சொதப்பினர் பீல்டிங்கில். அது மட்டும் சரியாக இருந்திருந்தால், பாகிஸ்தான் 100 ரன்களைக் கூட தொட்டிருக்க முடியாது என்பது குறிப்பிடதக்கது.
நேற்று போட்டி முடிவில் விராத் கோஹ்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், பீல்டிங் குறித்துதான் அதிருப்தி வெளியிட்டார். அவரது பேட்டியிலிருந்து:

பீல்டிங் சரியில்லை
வெற்றி சரிதான். பேட்டிங், பந்து வீச்சில் நாங்கள் சரியாகவே இருந்தோம். ஆனால் பீல்டிங்கில் நாங்கள் சொதப்பி விட்டோம். அதில் எனக்கு திருப்தி இல்லை.

அதுக்கு 9.. இதுக்கு 6
பேட்டிங், பவுலிங்குக்கு நான் 10க்கு 9 மார்க் தருவேன். ஆனால் பீல்டிங்குக்கு அது 6 மட்டுமே. மிகச் சிறந்த அணிகளுடன் விளையாடும்போது பீல்டிங் மிக மிக முக்கியமானது.

இன்னும் தேற வேண்டும்
பிராக்டிஸ் போட்டிகளிலிருந்து நாங்கள் நிறைய நம்பிக்கைளை கற்றுக் கொண்டோம். அதை பேட்டிங், பவுலிங்கில் வெளிப்படுத்தினோம். அதேபோல பீல்டிங்கிலும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றார் கோஹ்லி.

நிறைய கேட்ச் மிஸ்ஸிங்
நேற்றைய போட்டியின்போது நிறைய கேட்ச்சுகளை இந்தியா மிஸ் செய்தது. இதனால் சீக்கிரமே முடிந்திருக்க வேண்டிய போட்டி இழுத்துக் கொண்டே போனது குறிப்பிடத்தக்கது.

நான்கு அரை சதங்கள்
நேற்றைய போட்டியில் இந்தியாவின் சார்பில் ஆடிய வர்களில் ரோஹித் 91, ஷிகர் தவான் 68, கோஹ்லி 81, யுவராஜ் 53 என அரை சதம் போட்டு கலக்கினர். இதில் ரோஹித்தின் அவுட்தான் சரச்சைக்கிடமானதாக இருந்தது. அவர் களத்தில் இருந்திருந்தால் நிச்சயம் சதம் போட்டிருப்பார்.


Click it and Unblock the Notifications