Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின், டோணியை விட கோஹ்லிதான் பெரிய ஆளு.. எப்படி?

மும்பை: டிவிட்டரில் அதிக பாலோயர்கள் வைத்துள்ளவர்கள் வரிசையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தியுள்ளார் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி.

அவருக்கு தற்போது 80 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். மேலும் ஒவ்வொரு மில்லியன் இலக்கைத் தாண்டும்போதும் செல்பி எடுத்து அதைக் கொண்டாட தவறுவதில்லை கோஹ்லி.

இந்த முறையும் 8 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ளதையும் செல்பி போட்டு "செலபரேட்" செய்துள்ளார் கோஹ்லி.

80 லட்சம் பேர்

கோஹ்லியின் பாலோயர்கள் எண்ணிக்கை தற்போது 8 மில்லியனாக அதாவது 80 லட்சமாக உயர்ந்துள்ளது. இது இந்திய கிரிக்கெட் "லெஜன்டுகள்" சிலருடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

சச்சின், டோணியை விட

சச்சின், டோணியை விட

சச்சினுக்கு 77.3 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். டோணிக்கு 50 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். இவர்கள் இருவரையும் தாண்டி விட்டார் கோஹ்லி.

இலங்கைக்கு போய்ட்டு வந்தது முதலே

இலங்கைக்கு போய்ட்டு வந்தது முதலே

இலங்கையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்று திரும்பியது முதலே புதுப் புதுப் பெருமைகள் கோஹ்லியைத் தேடி வருகின்றன.

நம்பர் 1 வீரர்

நம்பர் 1 வீரர்

ஐசிசி டுவென்டி 20 தரவரிசையில் அவர் முதலிடத்தைப் பெற்றார். இப்போது பாலோயர்கள் எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளார்.

"அது"க்குப் பிறகுதான் எல்லாமே

ஆனால் அனுஷ்கா சர்மாவை காதலிக்க ஆரம்பித்த பின்னர்தான் கோஹ்லி, சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதானே.. கோஹ்லி நியூஸ்னா அனுஷ்காவைச் சொல்லாம எழுத முடியாதே!

Story first published: Tuesday, September 8, 2015, 13:36 [IST]
Other articles published on Sep 8, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+