டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து.. அப்படியே கிளம்பி சென்ற கோலி.. ஷாக்கான பேன்ஸ்.. நேற்று மாலை நடந்தது என்ன?
சென்னை: நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திற்கு பின் கோலி செய்த காரியம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டாம் ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறி வருகிறது. அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்துள்ளனர்.
பண்ட் மட்டும் தனி வீரராக போராடி வருகிறார். தொடர்ந்து பவுண்டரி, சிக்ஸ் என்று பண்ட் அசத்தி வருகிறார்.

வைரல்
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திற்கு பின் கோலி செய்த காரியம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. நேற்று முதல் நாள் ஆட்டத்தில் கோலி ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.வெறும் 5 பந்துகளை பிடித்த நிலையில் கோலி அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவுட் ஆனார்.

எப்படி
நேற்று நடந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ரஹானே ஆகியோர் நன்றாக ஆடினார்கள். ஆனால் கோலி வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினார். இதை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

விமர்சனம்
கோலி பார்ம் இழந்துவிட்டார். அவரிடம் பழைய வேகம் இல்லை. இவர் பழைய கோலி இல்லை என்று பலரும் விமர்சனங்கள் வைத்தனர்.நேற்று கோலியால் கூட தான் அவுட்டான விதத்தை பார்த்து நம்ப முடியாமல் கஷ்டப்பட்டார்.

என்ன நடந்தது
ஆனால் நேற்று ரோஹித் சர்மா 161 ரன்கள் எடுத்த பின் கோலி இயல்புநிலைக்கு திரும்பினார். நான் ஆடவில்லை என்றாலும் ரோஹித் சர்மா ஆடி விட்டார் என்று சந்தோசத்தில் கோலி இருந்தார். இணையத்தில் தனக்கு எதிராக வந்த விமர்சனங்களை எல்லாம் கோலி பெரிதாக தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை.

என்ன செய்தார்
நேற்று போட்டிக்கு பின் கோலி நேரடியாக டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து கிளம்பி மைதானத்திற்கு சென்றார். நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு கால்பந்து விளையாட சென்றுவிட்டார். நேற்று மாலை போட்டிக்கு பின் கோலி அவர் பாட்டுக்கு கவலையின்றி கால்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார்.

அசத்தல்
எனக்கு கவலை இல்லை . நான் ஆட்டத்தை ஆட்டமாக பார்க்கிறேன் என்று கோலி நிரூபித்துள்ளார். இவர் என்ன இப்படி கவலையே இல்லாமல் இருக்கிறார் என்று நேற்று ரசிகர்கள் பார்த்து ஷாக் ஆனார்கள். கோலி விரைவில் பார்மிற்கு திரும்புவார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications