தோனி - கங்குலி மோதல் பற்றிய கேள்வி.. சிரித்து மழுப்பிய கோலி.. கடைசியில் இப்படி சொல்லிட்டாரே!
Recommended Video
டெல்லி: தோனி மற்றும் கங்குலி இடையே நடக்கும் மறைமுக மோதல் குறித்த கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் கோலி பதில் அளித்துள்ளார்.
பிசிசிஐ அமைப்பின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி தேர்வாகி இருக்கிறார். இவர் தேர்வான சில மணி நேரங்களிலேயே தோனி குறித்து பேட்டி அளித்தார் .
அதில் தோனியின் எதிர்காலம் குறித்த விரைவில் முடிவெடுக்கப்படும். இது தொடர்பாக நான் கோலியுடன் ஆலோசனை நடத்த போகிறேன் என்று கங்குலி குறிப்பிட்டு இருந்தார்.

மறைமுகம அழுத்தம்
உலகக் கோப்பை தொடரிலேயே தோனி மீது கங்குலி நிறைய விமர்சனங்கள் வைத்தார். தோனியின் ஆட்டம் சரியாக இல்லை. அவரிடம் முன்பு போல வேகம் இல்லை. அவர் பொறுப்பாக ஆடுவதில்லை, என்று புகார்கள் வைத்தார். இதன் மூலம் தோனிக்கு கங்குலி மறைமுகமாக அழுத்தம் அளித்தார்.

என்ன கேள்வி
இந்த நிலையில் தோனி- கங்குலி இடையே நடக்கும் இந்த மோதல் குறித்து கோலியிடம் கேள்வி கேட்கப்பட்டது. கங்குலி உங்களிடம் தோனியை பற்றி பேசினாரா? தோனியின் எதிர்காலம் குறித்து கங்குலி உங்களிடம் ஏதாவது சொன்னாரா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு முதலில் கோலி பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பினார்.

மீண்டும் கேள்வி
இதையடுத்து மீண்டும் அதே கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன கோலி, கங்குலியை நான் இன்னும் சந்திக்கவில்லை. நான் அவரிடம் தோனி குறித்து பேசவும் இல்லை. அவர் அழைத்தால் நான் போய் பேசுவதற்கு தயார்.

பேசுவேன்
அவர் தோனி குறித்து பேசினால், நானும் விவாதம் செய்வேன். ஆனால் இப்போது வரை அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர் பிசிசிஐ அமைப்பின் தலைவர். அவர் அழைத்தால் நான் கண்டிப்பாக சென்று அவரிடம் முக்கிய விஷயங்களை பேசுவேன் என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications