Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் தந்தை இறந்த அன்று கிரிக்கெட் போட்டியில் ஏன் பங்கேற்றேன் தெரியுமா?: கோஹ்லி உருக்கம்

டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது தந்தை இறந்த அன்று கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் தந்தை கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி அதிகாலை 3 மணிக்கு மரணம் அடைந்தார். அன்றைய தினம் கர்நாடகா, டெல்லி கிரிக்கெட் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது.

தந்தை இறந்த துக்கத்தையும் மீறி கோஹ்லி அன்றைய போட்டியில் கலந்து கொண்டதுடன் 90 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். இது குறித்து கோஹ்லி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தந்தை

தந்தை

என் தந்தை இறந்தது தான் என் வாழ்வின் கடினமான தருணம் ஆகும். என் தந்தை இறந்த இரவு எனக்கு இன்னும் அப்படியே நினைவில் உள்ளது. தந்தை இறந்த அன்று காலை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு தானாக தோன்றியது.

கிரிக்கெட்

கிரிக்கெட்

என்னை பொருத்த வரை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பது பாவம் செய்வதற்கு சமம். என் வாழ்க்கையில் அனைத்துமே கிரிக்கெட் தான். கிரிக்கெட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறேன்.

உறுதி

உறுதி

என் கனவுகளையும், என் தந்தையின் கனவுகளையும் நனவாக்கும் சக்தியை என் தந்தையின் மரணம் அளித்தது. அதனால் தான் அவர் இறந்த அன்று கூட கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள சென்றுவிட்டேன் என்றார் கோஹ்லி.

கோஹ்லி

கோஹ்லி

நடந்து வரும் ஐபிஎல் 9வது சீசனில் கோஹ்லி பேட்டிங்கில் அசத்தி வருகிறார். நேற்று முன்தினம் டோணி தலைமையிலான புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோஹ்லி சென்ச்சுரி அடித்து தனது அணி வெற்றி பெற உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 9, 2016, 13:58 [IST]
Other articles published on May 9, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+