Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல்ல இங்கிலாந்து…! இப்போ அமெரிக்கா…! ‘அந்த’ வேலையை காண்பித்த கோலி, அனுஷ்கா ஜோடி

புளோரிடா: இந்தியாவில் சுதந்திரமாக உலாவ முடியாது என்பதால், மனைவி அனுஷ்காவுடன் வெளிநாடுகளில் சுற்றி திரிவதாக கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார்.

மனைவியுடன் ஊர் சுற்றுவது என்பது தனி. அதுவும் உள்ளூரிலோ அல்லது உள்நாட்டிலோ என்றால் அது தனி ரகம். அதையும் தான் வெளி நாடுகளில் சுத்து, சுத்தோ என்று சுத்தினால் எப்படி இருக்கும். அப்படி ஒரு கிளுகிளுப்பில் இருக்கிறது விராட் கோலி, அனுஷ்கா ஜோடி.

இந்திய கேப்டன் கோலி, தமது அணியுடன் அமெரிக்கா வந்திருக்கிறார். இந்தியா , வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் இன்று தொடங்குகிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.

கோலியின் வழக்கம்

கோலியின் வழக்கம்

முதல் இரு போட்டிகள் அமெரிக்காவில் நடக்கின்றன. முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணி அமெரிக்காவில் இருக்கிறது. வழக்கமாக கோலியுடன் அவர் மனைவி அனுஷ்கா எங்கு சென்றாலும் செல்வது வழக்கம்.

பல நாடுகளுக்கு பயணம்

பல நாடுகளுக்கு பயணம்

அப்படி உலக கோப்பை தொடரிலும் அனுஷ்காவை இங்கிலாந்தில் காண முடிந்தது. அதற்கு முன்னர் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என அனைத்து நாடுகளுக்கும் இந்திய அணியுடன் அனுஷ்காவும் பயணம் செய்தார்.

அனுமதி

அனுமதி

எங்கு சென்றாலும் மனைவியுடன் அவர் பயணித்தார். வீரர்கள் மனைவியுடன் செல்ல பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது. ஆனாலும், அதிக நாட்கள் சில வீரர்கள் மனைவியுடன் தங்கியிருந்தனர் என்ற குற்றச்சாட்டு இந்திய அணி மீது எழுந்தது. குறிப்பாக இந்த விஷயத்தில் ரோகித் சர்மா ஏகத்துக்கும் சிக்கினார் என்று கூட சொல்லலாம்.

உற்சாக வலம்

உற்சாக வலம்

தற்போது, அதன் அடுத்த கட்டமாக, அமெரிக்காவில் காணும் இடம் எல்லாம், கோலி,அனுஷ்கா ஜோடியாக இருக்கிறது. இவர்கள் இருவரும் மியாமி நகரை வலம் வந்தனர். அப்போது அவர்களை கண்ட ரசிகர்கள் உற்சாகமாயினர்.

வைரல் போட்டோக்கள்

அவர்களுடன் கோலியும், அனுஷ்காவும் போட்டோ எடுத்துக் கொண்டனர். கோலி, அனுஷ்கா ஜோடி ரசிகர்களோடு இதுபோன்று புகைப்படம் எடுத்துக் கொண்டதும் முதல்முறை அல்ல. எந்த நாடுகளுக்கு பயணம் செய்தாலும் அங்கே அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுதந்திரம் இல்லை

சுதந்திரம் இல்லை

இது பற்றி கோலி கூறியதாவது : இந்தியாவில் நாங்கள் இது போன்று வெளியில் சுதந்திரமாக உலாவ முடியாது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் நானும் அனுஷ்காவும் பிரபலமானவர்கள் என்பதால் எங்களுக்கு சிக்கல் இருக்கும். அதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் போது நாங்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்கிறோம் என்றார்.

Story first published: Saturday, August 3, 2019, 11:40 [IST]
Other articles published on Aug 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+