யப்பா…? கோலியின் ஆட்டத்தை பார்த்து வாயடைச்சு போய்ட்டேன்.. அட.. நீங்களா சொல்றது?
கேன்பரா:இந்திய கேப்டன் கோலியின் விளையாட்டு, அணியில் அவர் செயல்படும் திறன் தம்மை மலைக்க வைப்பதாக ஆஸி. முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பாராட்டி உள்ளார்.
ஆஸ்திரேலிய அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தது. ஆனாலும், அந்த போட்டியில் தனி ஒருவனாக போராடி இந்திய அணியின் மானத்தை காத்தார் விராட் கோலி.
ராஞ்சி ஒருநாள் போட்டியில் ஒரே ஆட்டத்தில் பல்வேறு சாதனைகளை தன் வசப்படுத்தியுள்ளார். அவருக்கு நாடு முழுவதும் மட்டுமல்லாது.. உலகம் எங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஹைடன் பாராட்டு
பல முன்னாள் வீரர்களும் கோலியை பாராட்டி வருகின்றனர். அவர்களில் ஒருவரான ஆஸி. முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கோலியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி உள்ளார்.

பேட்டிங் திறன்
கோலியின் ஆட்டத்திறனை கண்டு அவர் கூறியிருப்பதாவது:கோலியின் பேட்டிங் திறன் முற்றிலும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. ராஞ்சி போட்டியில் ரன்கள் எடுத்த போது அவரின் வேகம் நம்பமுடியாத அளவிற்கு இருந்தது.

செயல்திறன் அருமை
கோலியின் மிக எளிதான செயல்திறன் அருமையாக இருக்கிறது. அதுவே.... அவர் அரை சதம் அடித்தவுடன் தாமாக நூறுக்கு அழைத்துச் செல்கிறது.

அணுகுமுறைக்கு பாராட்டு
ஒவ்வொரு விளையாட்டிலும் அவர் கடந்து செல்லும் வழியில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை கடைபிடிக்கிறார். போட்டியில் அவரது வேகம் தனியாகவும், பிரமிக்க வைப்பதாகவும் தெரிகிறது என்று அவர் புகழ்ந்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications