Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பொறி"யில் சிக்கிய எலி.. துல்லியமாக "அந்த" இடத்தில்.. ஃபீல்டிங் நிறுத்தி.. காலி செய்த கேப்டன் கோலி

நாட்டிங்கம்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது மூன்றாவது விக்கெட்டை இழந்துள்ளது. அதுவும், கேப்டன் கோலியின் அட்டகாசமான வியூகத்தால்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, இன்று நாட்டிங்கமில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது. முதல் ஓவரிலேயே பும்ரா விக்கெட் கைப்பற்றினார். தொடர்ந்து விக்கெட்டுகள் விழ ஆடிப் போனது இங்கிலாந்து.

 முதல் விக்கெட்

முதல் விக்கெட்

நாட்டிங்கமில் இன்று தொடங்கிய முதல் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே பும்ரா விக்கெட்டை கைப்பற்றினார். ரோரி பர்ன்ஸ் க்ளீன் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதனால், இங்கிலாந்து ரன் கணக்கை தொடங்காமலேயே தனது முதல் விக்கெட்டை இழந்தது.

 2வது விக்கெட்

2வது விக்கெட்

பிறகு முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் பந்து வீசத் தொடங்கினார். இருவருமே தங்களது லைன் அண்ட் லெந்த்தில் எந்தவித காம்ப்ரமைஸும் செய்து கொள்ளவில்லை. சிராஜ் பந்துகள், அவ்வப்போது பேட்ஸ்மேன்களை சீண்டிக் கொண்டே இருந்தன. இதில் சிக்கியவர் க்ராலே. சிராஜ் பந்து அவரை பேட்டை உரசிக் கொண்டு கீப்பர் கையில் தஞ்சமடைய, என்று கோலி ரிவியூ எடுக்க, 2வது விக்கெட் உறுதியானது. க்ராலே 27 ரன்களில் வெளியேறினார்.

 கை மேல் பலன்

கை மேல் பலன்

இதன்பிறகு உணவு இடைவேளைக்கு பிறகு, இங்கிலாந்து அணி சற்று கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்கியது. ஆனால், நங்கூரம் பாய்ச்சி நின்ற சிப்லேவை காலி செய்தார் ஷமி. இந்த விக்கெட் உண்மையில் சுவாரஸ்யமானது. ஷமி வீசிய ஆட்டத்தின் 27.3வது ஓவரில், ஷார்ட் மிட் விக்கெட்டில் லோகேஷ் ராகுலை ஃபீல்டிங் நிறுத்தியிருந்தார் கேப்டன் கோலி. இதனை acrossல் வந்து சிப்லே ஃப்லிக் செய்ய பந்து லீடிங் எட்ஜ் ஆகி லோகேஷ் ராகுல் கைகளில் தஞ்சமடைந்தது. அவர் இப்படியும் இந்த ஷாட் தேர்வு செய்வார் என்று கணித்தே மிட் விக்கெட்டில் லோகேஷை நிறுத்தினார் கோலி. அதற்கு கை மேல் பலனும் கிடைத்தது.

 டார்கெட் பேர்ஸ்டோ

டார்கெட் பேர்ஸ்டோ

இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்த நிமிடம் வரை, இந்தியாவின் கைகளே ஓங்கியுள்ளது. ஏனெனில், இங்கிலாந்து தனது டாப் மூன்று விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. இன்று மேற்கொண்டு ஒரு விக்கெட் விழுந்தாலும், இங்கிலாந்தை 350 ரன்களுக்குள் இந்தியா கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். எனினும் கேப்டன் ரூட் கொஞ்சம் கூட பிசின்றி இந்திய பந்துவீச்சை க்ளீயர் செய்து வருகிறார். அதேசமயம், பேர்ஸ்டோ பேட்டிங்கில் தடுமாற்றம் தெரிகிறது. ஸோ, அவரை டார்கெட் செய்து காய்களை நகர்த்தினால், இந்தியாவின் மேலும் ஆதிக்கம் செலுத்தலாம்.

Story first published: Thursday, August 5, 2021, 12:27 [IST]
Other articles published on Aug 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+