கோலிக்கு நடக்க இருந்த பாராட்டு விழா ரத்து… காரணம்.. வீர வணக்கம்… வீரவணக்கம்
டெல்லி:டெல்லியில் விராட் கோலி உள்ளிட்டோருக்காக நடத்தப்பட இருந்த பாராட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான 5வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி தொடரை கைப்பற்றும் என்பதால் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
போட்டியின் முன்னதாக, டெல்லியைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் கம்பீர், சேவாக் மற்றும் கேப்டன் கோலி ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. டெல்லி கிரிக்கெட் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

தாக்குதல்
இதனிடையே, விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரஜத் சர்மா அறிவித்துள்ளார்.

ரத்து செய்த பிசிசிஐ
அவர் கூறியதாவது:டெல்லியை சேர்ந்த சேவாக், கம்பீர் மற்றும் கோலியை கவுரவிப்பது என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் புல்வாமா தாக்குதல் காரணமாக ஐபிஎல் தொடக்க விழாவை பிசிசிஐ ரத்து செய்திருந்தது.

நிதி அளிக்க முடிவு
ஆகவே... நாங்களும் இந்த பாராட்டு விழாவை ரத்து செய்துள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி அளிப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்.

டிக்கெட்டுகள் தீர்ந்தன
ஏற்கனவே 90 சதவீதம் டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்று தீர்ந்துவிட்டன. சர்வதேச போட்டி நடக்கும் போது, தேசத்துக்காக உயிர்நீத்தவர்களின் தியாகத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம் என்று அவர் கூறினார். டெல்லி கிரிக்கெட் சங்கமானது முதல் முறையாக மாநிலத்திலிருந்து அனைத்து முன்னாள் சர்வதேச வீரர்களுக்கும் விஐபி பாஸ் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications