Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

9, 1, 1.... அவசர உதவிக்கு அழையுங்கள்..! உலக கோப்பையில் கோலியின் ப்ளாப் ஷோ... கலாய்த்த ரசிகர்கள்

Recommended Video

World Cup 2019 : Ind Vs Nz : அடுத்தடுத்த விக்கெட்டுக்கு இதுதான் காரணமா?- வீடியோ

மான்செஸ்டர்: உலக கோப்பையின் முக்கியமான தருணங்களில் கேப்டன் கோலி, சொதப்பி அணியை தோல்விக்குள்ளாக்கும் சம்பவம் இப்பவும் நடந்திருக்கிறது.

குப்பை பிட்ச் என்று ஏகடியம் செய்யப்பட்ட ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்றிருக்கிறது இந்தியா. இதன்மூலம் பல சாதனைகளையும், உலக கோப்பையையும் கைவிட்டிருக்கிறது.

டாப் ஆர்டர் பேட்டிங் என்று மார்தட்டிய இந்தியாவை அரையிறுதியில் மண்ணை கவ்வ வைத்திருக்கிறது நியூசிலாந்து. மிகச் சிறந்த பேட்டிங் வரிசையை கொண்ட இந்தியாவை கனக்கச்சிதமாய் திட்டம் போட்டு வீழ்த்தியிருக்கிறது. போட்டியின் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் அவுட்டானார். அவர் எடுத்தது ஒரு ரன்.

1 ரன் எடுத்தார்

1 ரன் எடுத்தார்

அடுத்து வந்த கேப்டன் கோலியின் மீது ரசிகர்கள் அதீத நம்பிக்கை வைத்து ஆர்ப்பரித்தனர். அத்தனையையும் ஒரு ரன் அடித்து காலி செய்திருக்கிறார் கோலி. உலக கோப்பையில் முக்கியமான தருணங்களில் பேட்டிங்கில் சொதப்பி... அதாவது நாக் அவுட் போட்டிகளில் சொதப்பியவர் கோலி. அடுத்து வந்த கேப்டன் கோலியின் மீது ரசிகர்கள் அதீத நம்பிக்கை வைத்து ஆர்ப்பரித்தனர். அத்தனையையும் ஒரு ரன் அடித்து காலி செய்திருக்கிறார் கோலி. உலக கோப்பையில் முக்கியமான தருணங்களில் பேட்டிங்கில் சொதப்பி... அதாவது நாக் அவுட் போட்டிகளில் சொதப்பியவர் கோலி.

சொதப்பல் புதிதல்ல

சொதப்பல் புதிதல்ல

அதற்கான கடந்த கால வரலாறும் அப்படி தான் சொல்கிறது. உலக கோப்பை அரையிறுதியில் கோலி இப்படி சொதப்புவது புதிதல்ல. இதற்கு முன்னரும் சிங்கிள் டிஜிட்டில் அவுட்டாகி பெவிலியன் திரும்பியுள்ளார். 2011ம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து தொடங்குகிறது அவரின் இந்த சறுக்கல்.

அந்த 9,1,1 ரன்கள்

அந்த 9,1,1 ரன்கள்

அந்த ஆண்டின் உலக கோப்பையில் கோலி, 9 ரன்களில் வெளியேறினார். அதை தொடர்ந்து 2015ம் உலக கோப்பையில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார் கோலி. 2019ம் ஆண்டு மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் அரையிறுதியிலும் அச்சுப்பிசகாமல் அதே ஒரு ரன் எடுத்து அவுட்டாகி இருக்கிறார் அவர்.

கலாய்க்கும் ரசிகர்கள்

கலாய்க்கும் ரசிகர்கள்

தொடர்ந்து 3 உலக கோப்பைகளில் சொதப்பிய அவரை இணையத்தில் வைத்து செய்திருக்கின்றனர் நெட்டிசன்கள். அவரது ரன்களை 9,1,1 என்பதை குறிப்பிட்டு அவசர உதவியா இதோ கோலியின் 911 என்று வர்ணித்திருக்கின்றனர். அதாவது 911 என்பது என்பது அவசர தேவைக்காக உலகின் பல இடங்களில் பயன்படுத்தப்படும் ஒரு டெலிபோன் எண்ணாகும். அதை கையில் எடுத்து கிண்டல் கம்பை இணையத்தில் சுற்றி வருகின்றனர் நெட்டிசன்கள். அவற்றில் சாம்பிளுக்கு இதோ:

அதிக ரன்கள் எப்போது?

ரோபின் என்பவர் சரியாக 2011ம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து தற்போதைய அரையிறுதி வரை உள்ள ஸ்கோரை பதிவிட்டிருக்கிறார். அதில் கோலி எந்த நாட்டுக்கு எதிரான என்ன ரன்கள் அடித்திருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

எமர்ஜென்சி எண்கள்

ரோகித், ஜெகதீஸ் ஆகிய இருவரும் தான் ஏகத்துக்கும் கோலியை கலாய்த்து தொங்கவிட்டு இருக்கின்றனர். 3 அரையிறுதியில் அவர் அடித்த ரன்கள் 9,1,1 என்று குறிப்பிட்டு எமர்ஜென்சியா 911க்கு அழையுங்கள் என்று கேலி செய்து இருக்கின்றனர்.

கடந்த காலம் சொல்கிறது

இதே போன்று பலரும், கோலியின் கடந்த கால உலக கோப்பை அரையிறுதி ரன்களையும், நியூசிலாந்துக்கு எதிரான 2019ம் ஆண்டு உலக கோப்பை தொடர் அரையிறுதி தோல்வியையும் ஒப்பிட்டுள்ளனர். 911 என்ற எண்ணையும் அழையுங்கள் என்று கிண்டலும் செய்திருக்கின்றனர்.

5 அரைசதங்கள் அடித்தவர்

என்னதான் கோலியை வைத்து கிண்டலடித்து இருந்தாலும் அவரது பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு பல வகைகளில் உதவி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்த உலக கோப்பை தொடரில் கோலி, ஒரு சதம் கூட அடிக்க வில்லை. ஆனால், தொடர்ந்து 5 அரைசதங்கள் அடித்தார். தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கோலி, 55.38 சராசரியுடன் 443 ரன்கள் எடுத்து 9வது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Wednesday, July 10, 2019, 21:15 [IST]
Other articles published on Jul 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+