கோஹ்லின்னா சும்மாவா... டக் அவுட்டில் பெற்ற அவமானத்தை சதத்தின் மூலம் சமன் செய்தார்!
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடக்கும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி சதம் அடித்து புதிய சாதனை படைத்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இது இவர் அடிக்கும் 18வது சதம் ஆகும்.
கொல்கத்தாவின் ஈடன் கார்டான் மைதானத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் டெட்ஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஐந்தாவது நாளான இன்று என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அளவுக்கு போட்டி மிகவும் திரில்லாக சென்று கொண்டு இருக்கிறது.

இதுவரை கிரிக்கெட் உலகில் செய்யாத பல சாதனைகளை இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் செய்ய முடியும் என் கிரிக்கெட் ஆர்வலர்கள் கணித்து இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத இரண்டு சாதனைகளை இந்திய கேப்டன் கோஹ்லி செய்து இருக்கிறார்.
அதன்படி இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் கோஹ்லி டக் அவுட் ஆகி வெளியே சென்றார். அதன்முலம் அவர் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் அதிக டக் அவுட் சாதனைகளை முறியடித்தார். இதனால் சோஷியல் மீடியாக்களில் பலர் அவரை கலாய்த்து வந்தனர்.
இந்த நிலையில் அதை முறியடிக்கும் வகையில் இரண்டாவது இன்னிங்சில் கோஹ்லி சதம் அடித்துள்ளார். இது ஐசிசி போட்டிகளால் அவர் அடிக்கும் 50 வது சதம் ஆகும். டெஸ்ட் போட்டிகளில் இது இவர் அடிக்கும் 18வது சதம் ஆகும். இதன் மூலம் இவர் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கரின் 11 டெஸ்ட் செஞ்சுரிகள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications