
கதைச் சுருக்கம்
நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் எடுக்க, இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் எடுத்தது. பிறகு இங்கிலாந்து இரண்டாம் இன்னிங்ஸில் கேப்டன் ஜோ ரூட் சதம் மூலமாக 303 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஸ்கோரை பார்க்கும் போதே.. அடடா ஈஸியான டார்கெட் ஆச்சே!-ன்னு தோணுதா ? யெஸ்.. சேம் ஃபீலிங் தான் இங்கயும். என்னதான் இங்கிலாந்து வலிமையான பவுலிங் லைன் அப் கொண்டிருந்தாலும், இந்தியா நிச்சயம் இந்த டார்கெட்டை 9 விக்கெட்டை இழந்தாவது எட்டியிருக்கவே வாய்ப்புகள் அதிகம். இத்தனைக்கும் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. ஸோ, கடைசி நாளில் நிறுத்து நிதானமாக விளையாடியிருந்தாலே இந்தியா ஜெயித்திருக்கும். அப்படியொரு அருமையான வாய்ப்பு இந்தியாவுக்கு கை நழுவிப் போனது. இப்போ சொல்லுங்க.. ஒரு கேப்டனா கோலிக்கு இது எவ்வளவு காண்டா இருந்திருக்கும். அதைத் தான் அவர் சற்று காட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கோலி காட்டம்
இது வெட்கக் கேடானது. நாங்கள் 3வது மற்றும் நான்காம் நாளில் மழையை எதிர்பார்த்திருந்தோம், ஆனால் அது ஐந்தாம் நாளில் வரத் தேர்வு செய்துவிட்டது. இலக்கை எட்டுவதில் நாங்கள் நல்ல நிலையில் இருப்பதாக நினைத்தோம். இதைத்தான் நாங்கள் செய்ய விரும்பினோம்: இந்த டெஸ்ட் தொடரை நாங்கள் வலுவாக தொடங்க விரும்பினோம்.

எல்லாம் போச்சு
"ஐந்தாவது நாளில் எங்களுக்கு முன்னால் பல நல்ல வாய்ப்புகள் இருந்தன. இலக்காக 150 ரன்கள் மட்டும் இருக்கும் போது, ஒரேயொரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தால் போதும் வெற்றிப் பெறுவதற்கு. முதல் டெஸ்ட்டில் நாங்கள் நிச்சயம் வெற்றிப் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே உணர்ந்தோம். ஆனால், ஐந்தாவது நாளை எங்களால் நிறைவு செய்ய முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. நாங்கள் நன்றாக பந்து வீசினோம், போட்டியில் நிலைத்திருக்க போதுமான அளவு பேட்டிங் செய்தோம், ஆட்டத்தில் முன்னிலையில் இருந்தோம்.

அஷ்வின் நிலைமை?
முகமது ஷமி, சிராஜ், பும்ரா ஆகிய பவுலர்களிடமிருந்து 50 ரன்கள் வந்தது என்பது தங்கம் போன்றது. 40 ரன்கள் முன்னிலை போதும் என்று நினைத்திருந்த நிலையில் 95 ரன்கள் முன்னிலை பெற இவர் இவர்கள் காரணமானார்கள். பவுலர்கள் ரன்கள் எடுத்தால் எதிரணிக்கு எரிச்சல் அதிகரிக்கும். இந்தத் தொடரில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு ஸ்பின்னர் என்ற சேர்க்கையே தொடரில் இருக்க வாய்ப்புள்ளது. சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்வது எங்களது பலம். இந்த அணிச்சேர்க்கைதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. (ஆக. அஷ்வினுக்கு இந்த தொடரில் வாய்ப்பே இல்லை-னு சொல்ல வராரோ!!?)


Click it and Unblock the Notifications