Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப மோசம்.. நான் இப்படி குறை சொல்லிட்டு இருக்க மாட்டேன்.. வெற்றிக்கு பின் கோபப்பட்ட கோலி.. பகீர்!

சென்னை: இங்கிலாந்து வீரர்கள் சென்னை பிட்சை குறை சொல்ல கூடாது என்று கேப்டன் கோலி குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகவும் அதிரடியாக ஆடிய இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி உள்ளது. இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்தை இதற்கு முன் இந்திய அணி இவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே இல்லை.

பேட்டி

பேட்டி

இந்த போட்டிக்கு பின்பாக கோலி அளித்த பேட்டியில், நாங்கள் டாஸில் வெற்றிபெற்று இருந்தாலும், தோல்வி அடைந்து இருந்தாலும் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்காது. ஏனென்றால் நாங்கள் இரண்டாவது இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்தோம். அதேபோல் இரண்டாவது நாளே நாங்கள் நன்றாக பவுலிங் செய்து விக்கெட் எடுத்தோம். இதனால் டாஸ் இதில் பெரிய பங்கு வகிக்கவில்லை.

பேச்சு

பேச்சு

முதல் செஷன் ஆட்டத்தில் இருந்தே நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். பிட்ச் எப்படி இருக்கிறது என்பது முக்கியம் இல்லை. நாங்கள் பிட்சை குறை சொல்ல விரும்பவில்லை. பிட்சை எப்படி நமக்கு சாதகமாக பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அதை இந்திய வீரர்கள் நன்றாக செய்தனர்.

கோபம்

கோபம்

பண்ட் இந்திய அணியில் நன்றாக பேட்டிங், கீப்பிங் செய்தார். ஆஸ்திரேலியாவில் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவரின் கீப்பிங் பெரிய அளவில் முன்னேறி உள்ளது. அவர் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார்.

.

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். முதல் போட்டியிலேயே அக்சர் பட்டேல் சிறப்பாக இருக்கிறார். அஸ்வின் தனது பேட்டிங் பவுலிங் இரண்டிலும் கலக்கி உள்ளார். அவரின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அடுத்து நடக்கும் பிங்க் பால் போட்டிக்கு தயார் ஆக வேண்டும், என்று கோலி குறிப்பிட்டு இருக்கிறார்

Story first published: Tuesday, February 16, 2021, 13:59 [IST]
Other articles published on Feb 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+