தீயா வேலை செய்யும் கேப்டன்.. கிங் கோஹ்லியின் இன்னுமொரு இரட்டை சதம்!
டெல்லி: இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இது கோஹ்லியின் 6வது இரட்டை சதம் ஆகும். 233 பந்துகளில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அவரின் இந்த சாதனை காரணமாக இணையம் முழுக்க அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.

பார்ட்னர்ஷிப் கெத்து
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து கோஹ்லி சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை முரளி விஜய், செஞ்சுரி அடித்து இருந்தார். அதன்பின் கோஹ்லியும் அதிரடியாக ஆடி செஞ்சுரி அடித்தார். தற்போது கோஹ்லி ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப்பில் இணைத்துள்ளார்.

சாதனை
நேற்று சதம் அடித்ததன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் அனைத்து டெஸ்டுகளிலும் சதம் விளாசிய ஒரே இந்திய கேப்டன் என்ற சிறப்பை பெற்றார். மேலும் விரைவாக டெஸ்ட் போட்டியில் 5000 ரன்களை கடந்து அவர் சாதித்துள்ளார்
கோஹ்லி இரட்டை சதம்
இன்றைய நாளிலும் விடாமல் அதிரடியாக விளையாடினார். மிகவும் வேகமாக ஆடிய கோஹ்லி 233 பந்துகளில் இரட்டை சதம் அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இது கோஹ்லியின் 6வது இரட்டை சதம் ஆகும்.

வாரவாரம் கோஹ்லி ஆரவாரம்
இந்த டெஸ்ட் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடிக்கிறார். சென்ற வாரம் நடந்த போட்டியிலும் இவர் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 6 இரட்டை சதம் விளாசிய ஒரே கேப்டன் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications