Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார்யா இவர்.. வேரியேஷனே இல்லை.. சம்பந்தமே இல்லாமல் கோலி கொண்டு வந்த வீரர்.. சறுக்கியது இங்குதான்!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கோலியின் இரண்டு முக்கியமான முடிவுகள் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது.

அதிலும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மிகவும் அதிரடியாக ஆடி 160+ ரன்களை எடுத்துள்ளார். இடையில் சிப்லி, ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் கொடுத்த கேமியோ பெரிய இங்கிலாந்து அணிக்கு பெரிய திருப்பத்தை கொடுத்தது.

எப்படி

எப்படி

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 பவுலர்களுடன் களமிறங்கியது. 3 ஸ்பின் பவுலர்கள், 2 ஸ்பீட் பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக நதீம் என்ற வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேபோல் இஷாந்த் சர்மாவிற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிக்கல்

சிக்கல்

ஆனால் கோலியின் இந்த அணி தேர்வுதான் ;பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது . இதில் இஷாந்த் சர்மா காயம் காரணமாக ஒன்றரை வருடமாக ஆடவில்லை. இப்படி இருக்கும் போது அவரை அணியில் எடுத்தது பெரிய அளவில் உதவவில்லை. இஷாந்த் சர்மா இரண்டு நாட்களாக பெரிய அளவில் சிறப்பாக பந்து வீசவில்லை .

 விக்கெட்

விக்கெட்

முறையாக விக்கெட் எடுக்க கூடிய அளவில் இஷாந்த் சர்மா பந்து எதையும் வீசவில்லை. இவர் வீசிய முதல் 21 ஓவரில் 4 பந்து மட்டுமே விக்கெட் எடுக்க கூடிய வகையில் இருந்தது. இன்னொரு பக்கம் இந்திய அணியில் நதீம் எடுக்கப்பட்டதும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

நதீம்

நதீம்

நதீம் பெரிய அளவில் பவுலிங்கில் வேரியேஷன் காட்டவில்லை. ஒரே மாதிரி ஸ்பின் பவுலிங் செய்தார். இவர் ஸ்டோக்ஸ் விக்கெட்டை எடுத்து இருந்தாலும் கூட பெரிய அளவில் கடினமான பந்துகளை வீசவில்லை. முக்கியமாக விக்கெட் எடுக்க கூடிய வகையில் வீசவில்லை .

 நல்ல லைன்

நல்ல லைன்

நல்ல லைனில் வீசினாலும் ஒரே மாதிரி இவர் பவுலிங் செய்கிறார். இவரை கோலி ஏன் அணியில் எடுத்தார் என்று கேள்வி எழுந்துள்ளது. இவருக்கு பதிலாக குல்தீப் யாதவை அணியில் எடுத்து இருந்தால் கூட அவர் நன்றாக பவுலிங் செய்து இருப்பார் என்று பலரும் கோலிக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

Story first published: Saturday, February 6, 2021, 14:39 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+