Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன பண்ணிட்டு இருக்க.. கில்லை களத்திலேயே கோபமாக திட்டிய கோலி.. வெளியான வீடியோ.. பாவம்யா!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சுப்மான் கில்லை கோலி திட்டியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இங்கிலாந்தை விட இந்திய அணி தற்போது 309 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்று ஆட்டத்தில் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி அதிர்ச்சி அளித்துள்ளது.தற்போது அஸ்வின், கோலி ஆகியோர் களத்தில் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.

சென்னை

சென்னை

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சுப்மான் கில்லை கோலி திட்டியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது பீல்டர்கள் மிகவும் நெருக்கமாக நிற்க வைக்கப்பட்டனர்.

கீப்பர்

கீப்பர்

கீப்பர், இரண்டு ஸ்லிப், சில்லி என்று அருகருகே பீல்டர்கள் நிற்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் கோலியும் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு சில்லி பாயிண்ட் அருகே பீல்டிங் நின்று கொண்டு இருந்தார். இதில் ஓவருக்கு இடையில்தான் கோலி திடீரென சுப்மான் கில் மீது கோபம் அடைந்தார்.

ஹெல்மெட்

ஓவருக்கு இடையில் கோலி தனது ஹெல்மெட்டை தூக்கி வீசினார். சுப்மான் கில் அதை கேட்ச் பிடிப்பார் என்று நினைத்துக் கொண்டு கோலி ஹெல்மெட்டை தூக்கி வீசினார். இதை சுப்மான் கில் பார்க்காமல் அப்படியே நடந்து சென்றுவிட்டார். இதனால் ஹெல்மெட் நேராக சென்று பிட்சில் விழுந்தது.

பிட்ச் எப்படி

பிட்ச் எப்படி

ஹெல்மெட்டை பிட்ச் மீது போடுவது விதிப்படி தவறானது. இதனால் கோலி உடனே கில் மீது கோபம் அடைந்தார். என்ன இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று கில்லை பார்த்து கோபமாக கேட்டார். இதையடுத்து உடனே கில் அந்த ஹெல்மெட்டை அங்கிருந்து எடுத்தார்.

வைரல் சம்பவம்

வைரல் சம்பவம்

இந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. கோலி நேற்று களத்தில் பலமுறை கோபம் அடைந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு கோலி நேற்று மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டார்.

Story first published: Monday, February 15, 2021, 11:08 [IST]
Other articles published on Feb 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+