Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம ஸ்மார்ட் முடிவு.. இதுக்குத்தான் கோலி கேப்டனா இருக்கணும்.. களத்தில் இதை கவனித்தீர்களா?

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி எடுத்த இரண்டு முக்கியமான முடிவுகள் அவரின் ஸ்மார்ட் கேப்டன்சியை நிரூபித்து உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது.

இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது. சென்னை பிட்ச் முதலில் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

கோலி

கோலி

இந்த போட்டியில் கோலி எடுத்த இரண்டு முக்கியமான முடிவுகள் அவரின் ஸ்மார்ட் கேப்டன்சியை நிரூபித்து உள்ளது. திடீரென சபாஷ் நதீமை கோலி அணிக்குள் கொண்டு வந்தது முதல் முடிவாகும். அஸ்வினுக்கு கோலி ஓவர் கொடுத்த ஆர்டரும் இன்னொரு ஸ்மார்ட் முடிவு ஆகும்.

இலங்கை

இலங்கை

இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்பின் பவுலர்களிடம் கடுமையாக திணறியது. முக்கியமாக இலங்கையின் லசித் ஐம்புல்துணியாவிடம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறினார்கள். இவர் இடது கை ஆர்டாக்ஸ் ஸ்டைல் பவுலர்.

லசித்

லசித்

இலங்கையின் லசித் வெறும் இரண்டு டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக 15 விக்கெட் எடுத்தார். இவரை போலவே நஜீப் இடது கை ஆர்டாக்ஸ் ஸ்டைல் பவுலர். இதனால்தான் நஜீப்பை கோலி துணிச்சலாக அணிக்குள் எடுத்துள்ளார் . இங்கிலாந்து அணிக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அஸ்வின்

அஸ்வின்

இன்னொரு பக்கம் இன்று அஸ்வினுக்கு கோலி சீக்கிரமே ஓவர் கொடுத்தார். 10 ஓவருக்கு பின் அஸ்வின் பவுலிங் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஸ்வினுக்கு 6 ஓவர் முடிந்த உடனே கோலி ஓவர் கொடுத்தார் .

ஸ்பீட்

ஸ்பீட்

ஸ்பீட் பவுலிங்கில் விக்கெட் விழவில்லை. சென்னை ஸ்பின் பிட்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் அஸ்வினை கோலி துரிதமாக பயன்படுத்தி உள்ளார்.

Story first published: Friday, February 5, 2021, 10:57 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+