Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3-வது டெஸ்ட் போட்டி: கோஹ்லி அபார சதம்! ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்தியா!!

இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருகிறது. இந்திய அணி கேப்டன் அதிரடி சதமடித்து அசத்தினார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டில் 174 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.

3-வது மற்றும் கடைசி போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்சர் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கவுதம் காம்பீர்

கவுதம் காம்பீர்

இந்தியா 4 பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கியது. தொடக்க வீரராக கவுதம் காம்பீர் களமிறங்கினார். 2 ஆண்டுகளுக்குப் பின்னர் காம்பீர் களமிறங்கி 29 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

புஜாரா அவுட்

புஜாரா அவுட்

அதன்பின்னர் புஜாரா, கோஹ்லி ஜோடி விக்கெட் விழாமல் நிதானமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 100-ஐ தொட்டபோது புஜாரா விக்கெட்டை இழந்தார்.

கோஹ்லி சதம்

கோஹ்லி சதம்

இந்திய அணி 76வது ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. 77வது ஓவரின் முதல் பந்தில் ரஹானே சிக்சர் அடித்து அரை சதத்தினை கடந்தார். இதேபோல் கேப்டன் கோஹ்லியும் சதமடித்தார்.

ஹாட்ரிக் வெற்றி

ஹாட்ரிக் வெற்றி

அவர் 184 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லியின் 13-வது சதம் இது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லியின் 38-வது சதமாகும் இது. இந்த போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் தொடருவதால் ஹாட்ரிக் வெற்றி சாத்தியமே.

Story first published: Saturday, October 8, 2016, 17:02 [IST]
Other articles published on Oct 8, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+