Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போச்சே கல்யாணத்தால டி-20 ரேங்கிங் போச்சே.. சாதனையை நழுவவிட்ட புதுமாப்பிள்ளை கோஹ்லி!

டெல்லி: ஐசிசி தற்போது டி-20 போட்டிகளுக்கான தாவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் தற்போது இந்திய வீரர் கோஹ்லி பின் தங்கி உள்ளார்.

கோஹ்லி தரவரிசையில் பின் தங்கி இருந்தாலும் இந்திய அணி தரவரிசையில் அசாத்திய பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது. மேலும் சில புதிய வீரர்களும் தரவரிசையில் முன்னேறி இருக்கிறார்கள்.

கோஹ்லிக்கு திருமணம் நடந்த காரணத்தாலேயே அவர் தரவரிசையில் பின்னுக்கு சென்று இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

கோஹ்லிக்கு திருமணம்

கோஹ்லிக்கு திருமணம்

விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா கடந்த டிசம்பர் 11ம் தேதி இத்தாலியில் உள்ள மிலன் நகரில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்காக விராட் கோஹ்லி விடுப்பு எடுத்து இருந்தார். இதனால் அவர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டியில் கலந்து கொள்ளவில்லை. இனி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் மட்டும் இவர் கலந்து கொள்வார்.

தரவரிசை பட்டியல்

தரவரிசை பட்டியல்

தற்போது ஐசிசி அமைப்பு சர்வதேச டி-20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அந்த பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இலங்கைக்கு எதிரான தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதால் இந்த இடம் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. அதேபோல் சாஹல் 30வது இடத்தில் இருந்து 16வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். முதல் இடத்தில் பாகிஸ்தான் அணி இருக்கிறது.

பின்னுக்கு சென்றார்

பின்னுக்கு சென்றார்

இந்த தொடரில் கலந்து கொள்ளாத காரணத்தால் கோஹ்லிக்கு 6 புள்ளிகள் குறைந்து இருக்கிறது. இதனால் டி-20 தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த கோஹ்லி மூன்றாம் இடத்திற்கு பின்தங்கி இருக்கிறார். ஆனால் ஒருநாள் தரவரிசையில் இன்னும் முதல் இடத்தில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை

சாதனை

இதற்கு முன் அவர் ஒருநாள் மற்றும் டி-20 போட்டியில் முதல் இடத்தில் இருந்தார். டெஸ்ட் போட்டியில் மட்டும் இரண்டாம் இடம் வகித்தார். தென்னாபிரிக்க போட்டியில் சரியாக விளையாடினால் இவர் டெஸ்டிலும் முதல் இடம் பிடிக்க முடியும். இதன் மூலம் இவர் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடிக்க முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் எடுத்த விடுமுறை காரணமாக அந்த சாதனை கைநழுவிப் போய் இருக்கிறது.

Story first published: Tuesday, December 26, 2017, 11:04 [IST]
Other articles published on Dec 26, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+