Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு ஆக்ரோஷம் மட்டுமில்லை.. புன்னகையும் வரும்.. ட்ரென்டிங் ஆகும் கோலியின் ட்வீட்!

Recommended Video

ட்ரென்டிங் ஆகும் கோலியின் ட்வீட்- வீடியோ

ஆக்லாந்து : கோலி ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரர் என அறியப்பட்டவர். ஆனால், அவர் இயல்பிலும் அப்படி தான் இருப்பாரா?

தன் ட்விட்டர் பக்கத்தில் கோலி சாதாரணமாக அமர்ந்து புன்னகைத்துக் கொண்டு இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது வைரல் ஆகி வருகிறது.

கோலியின் புன்னகை

கோலி பகிர்ந்துள்ள புகைப்படத்தில் சோபாவில் அமர்ந்து எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடித்துக் கொண்டு மனம் விட்டு சிரித்துக் கொண்டு இருக்கிறார். இதை கோலி ரசிகர்கள் பெரிய அளவில் ரசித்து வருகிறார்கள்.

கோலி என்றால் ஆக்ரோஷம்

கோலி என்றால் ஆக்ரோஷம்

சிலர் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் புகைப்படங்களை பதிவிட்டு, அந்த கோலியா, இப்படி புன்னகை செய்கிறார்? என கேட்டுள்ளனர். கோலி என்றால் ஆக்ரோஷம் எனவும் சிலர் கூறியுள்ளனர்.

ரோஜர் பெடரருடன் ஒரு க்ளிக்

கோலி சில நாட்கள் முன்பு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்று இருந்த டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் கோலியின் மனைவி அனுஷ்காவும் இடம் பெற்று இருந்தார்.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

இந்தியா ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது. அந்த மகிழ்ச்சியில் இருக்கும் கேப்டன் கோலி, அடுத்து நியூசிலாந்து தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறார்.

Story first published: Monday, January 21, 2019, 13:42 [IST]
Other articles published on Jan 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+