ரேங்க் பட்டியல் வெளியிட்டது ஐசிசி.. அனுஷ்காவாலும் அசைக்க முடியவில்லை கோஹ்லி இடத்தை!
துபாய்: உலக கோப்பை முடிந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசையை இன்று வெளியிட்டுள்ளது ஐசிசி. பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசையில் முதல் பத்து இடத்தில் 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
உலக கோப்பையில் எதிர்பார்த்த அளவுக்கு ஆடாவிட்டாலும், விராட் கோஹ்லி 4வது இடத்திலேயே தொடருகிறார். ஷிகர் தவான் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில், கேப்டன் கூல், டோணி 8வது இடத்திலுள்ளார்.

ரோகித் முன்னிலை
தொடக்க வீரர் ரோகித் ஷர்மா, 7 இடங்கள் முன்னேறி, 12வது இடத்தை பிடித்துள்ளார். அதே இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக்கும் உள்ளனர்.

டி வில்லியர்ஸ் டாப்
ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர்-1 இடம் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்சுக்குதான். 2வது இடம் சங்ககாராவுக்கு, மூன்றாமிடம், ஆம்லாவுக்கு.

ஸ்டார்க் இதிலும் டாப்
பந்து வீச்சாளர்களை பொறுத்தளவில் ஆஸ்திரேலியாவின், ஸ்டார்க் முதலிடத்திலுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் 2வது இடத்திலுள்ளார். அதேநேரம் உலக கோப்பையில் ஆடாவிட்டாலும், புள்ளிகள் அடிப்படையில் பாகிஸ்தானின் சையது அஜ்மல் 3வது இடத்திலும், வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன் 5வது இடத்திலும் உள்ளனர்.

முதல் பத்தில் ஆட்கள் இல்லை
பவுலர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்திய பவுலர் ஒருவர் கூட இல்லை. இந்தியாவின் முகமது ஷமி, 11வது இடத்தில் உள்ளார். அஸ்வின் 14வது இடத்திலும், உமேஷ் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார், முறையே, 19 மற்றும் 20வது இடங்களிலும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications